மரியாளின் விசுவாசம் Beaumont, Texas, USA 61-0121 1நன்றி சகோதரனே. அது நிச்சயமாகவே... அதற்கு “ஆமென்' சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். மிகவும் அசாதாரண வழியிலே இன்று காலையிலே கர்த்தர் எம்மை ஆசீர்வதித்தார். நான் பேசப் போவதற்காக ஒரு விஷயத்தை என் சிந்தையில் கொண்டவனாய் இருந்தேன்; ஆனால் அப்படியே விஷயத்தை அங்கேயே தானே மாற்றிப் போட்டார். அவ்விதமான கூட்டங்களைத்தான் நான் விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரின் இனிமை அப்படியே அசைவாடிக் கொண்டிருந்தது, கட்டிடத்தில் நிரம்பி வழிந்தோடியது. பிறகு கடந்த இரவிலே பரிசுத்த ஆவியானவர் , அது தீர்க்கதரிசனமாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். என் பின்னால் அமர்ந்திருக்கிற ஊழியக்காரர்களுக்குக் கூறினேன், ஒரு வேளையானது வரப்போகிறது என்றேன். அவர்கள் தியாகம் செய்தவர்களாய் இருந்தார்கள் , இன்று காலையில் கூட, நான் முழு மூச்சோடு பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னதாகவே, பரிசுத்த ஆவியானவர் ஊழியக்காரர்கள் மத்தியில் நேராகச் சென்று, அவர்கள் சுகம் பெற்றதை அறிவித்து, அவர்களைச் சுற்றிலும் சென்று, அவர்களுடைய நிலைமைகளை எடுத்துக் கூறி, அவர்களுடைய வியாதிகளைப் பற்றியும், இன்னபிற விஷயங்களையும் எடுத்துக் கூறினார். ஓ, அவர் நல்லவர், அவ்வாறு அவர் இல்லையா?நிச்சயமாகவே அவர் அவ்வாறே இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான பிதா. அவருக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 2இப்பொழுது, நாளை மதியம், கர்த்தருக்கு சித்தமானால், நாளைக்குள்ள கூட்டத்தை, நாளை இரவுக்குப் பதிலாக நாளை மதியக் கூட்டமாக மாற்றப்போகிறாம். அது நன்றாக இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்வதினால், ஒவ்வொருவரும், வழக்கமான தங்களுடைய சபை ஆராதனைகள் இரத்தாகாமல் நடைபெற அவர்கள் ளுக்கு வாய்ப்பளிக்கும். ஒரு கிறிஸ்தவனின் கடமையென்னவெனில், அவன் எப்போதும் அவனது பணியில் தவறாது நிற்க வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணுவதுண்டு. அவ்விதமான முறையில், நாம் இவ்விதமான ஒரு கூடிவருதலை உடையவர்களாக இருக்கும்போது, தங்கள் சபை ஆராதனைகளை ரத்து செய்துவிட்டு, தங்களுடைய ஜனங்களை இதற்கு அனுப்பிவிட அவர்கள் விருப்பமுள்ளவர்களாய் இருக்கும் போது... இந்நகரத்தைச் சார்ந்திராத, வெளியிலிருந்து தங்கள் சபைகளை விட்டு இங்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் கூறுவதென்னவெனில், நாளைக்கு சபைக்குச் செல்லுங்கள். உங்கள் விருப்பப்படியானதை தெரிந்துகொள்ளுங்கள். இங்கே ஒரு கூட்டம் அருமையான சகோதரர்கள் உள்ளனர்; நாங்கள் பிரசங்கிக்கிற அதே சுவிசேஷத்தை விசுவாசிக்கக் கூடிய சில அருமையான சபைகளும் உள்ளன. அவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். நாளைக் காலையிலும், நாளை இரவிலும், உள்ள அவர்களுடைய ஞாயிறு ஆராதனை பள்ளியில், நீங்கள் வந்திருப்பதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். இப்போது, ஏதாவது ஒரு சபைக்கு நீங்கள் தெரிந்து கொள்வதின்படியே, போவதற்கு நிச்சயமாயிருங்கள். இச்சகோதரர்கள், தாங்கள் எங்கேயிருக்கிறோம் என்றும் அதைப் பற்றியுள்ளவைகள் இன்னதென்றும் உங்களுக்குக் கூறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அதை அவர்கள் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். வழக்கமாக அதை அவர்கள் செய்வார்கள். அவர்களிடத்திற்கு நீங்கள் யாவரும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே, இப்போது, சபை... நீங்கள் எந்த சபைக்குப் போனாலும், எதன் சார்பாக நீங்கள் இருக்கிறீர்களோ, நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும், நல்லது, அது அருமையாக இருக்கும். ஜனங்கள் திரைப்படங்களுக்கு போகிறார்கள், அல்லது எதையோ செய்கிறார்கள். ஆகவே மக்கள் மத்தியில் ஒரு பெரிய ஆவி நிலவுகிறது. இந்த வழியிலோ ஒரு மகத்தான எழுப்புதலானது முன்னேறிச் செல்லுகிறது. இன்று காலையிலே கூட்டத்தில் காணப்பட்ட அந்த இனிமையான ஆவி ஒருபோதும் இழந்து போகப்படமாட்டாது என்று நம்புகிறேன். தேவனுடைய தயவும், இரக்கமும், வந்து நம்மை ஆசீர்வதிப்பதும், இன்று காலையில் அவர் செய்ததுபோன்ற செயல்களை செய்வதும், அதை நான் காண்பதும் உண்மையிலேயே மிகவும் அருமையானதாக இருக்கிறது. 3இப்போது, கர்த்தருக்கு சித்தமானால், நாளை மதியம் ஒரு நல்ல கிறிஸ்தவ பேரணியாக நடத்த வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது யாவரும் வெளியே புறப்பட்டு வரட்டும். நாளை மதி யம் கர்த்தருக்கு சித்தமானால், சுவிசேஷ செய்தியை பிரசங்கிக்கப்போகிறோம். நமது புத்தகங்களின் பொறுப்பாளராக உள்ள சகோ. லியோ அவர்கள், என்னிடம் “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, இங்குள்ள இம்மக்களுக்கு, பழங்காலத்து பிரசங்கத்தை நிகழ்த்தவேண்டும்'' என்று கூறினார். கர்த்தர் நமக்கு நல்லவராக இருக்கிறபடியினால், நாம் நமது வேதாகமங்களிலே லூக்கா சுவிசேஷத்திலிருந்து ஒரு வசனத்தை, முதலாம் அதிகாரம் முப்பத்தியேழாம் வசனம் வாசிக்க விரும்புகிறோம். அப்பாடத்தை நீங்கள் குறித்து கொள்ளலாம். லூக்கா 1:37, 38 தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். 4சற்று நேரம் நாம் தலைகளை வணங்குவோமாக. எங்கள் பரம் பிதாவே, எங்களுடைய குறைகளை மன்னிக்கும்படி, மன்னிப்பையும், இரக்கத்தையும் வேண்டி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் வருகிறோம். கர்த்தாவே, இன்றிரவிலே, நீர் எங்களை இந்த பரிசுத்த ஆவியின் மகத்தான சந்திப்புகளினாலே எங்களைத் தொடர்ந்து சந்திக்கும்படியும், நீர் உமது இரண்டாம் வருகையிலே மீண்டும் சரீரத்தில் தோன்றுகிற வரையிலும், நீர் உம்மை ஜீவனோடிருக்கிறவராக காண்பிக்க வேண்டுமென்றும் வேண்டுகிறோம். பரம பிதாவே, எங்கள் மத்தியில் யாராவது இன்னமும் உம்மை தங்களது பிரியமான நேச இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், இன்றிரவில் அதற்குரிய தருணமாக இருக்கவும், அப்போது, அவர்கள், 'ஆம் ஆண்டவரே நான் விசுவாசிக்கிறேன்'' என்று யாவற்றுக்கும் போதுமான அறிக்கையைச் செய்யவும். தக்கதாக ஆகும்படி செய்ய வேண்டுமென ஜெபிக்கிறோம். இவ்வறிக்கையைச் செய்ய ஆரம்பித்திருக்கிற மக்களிலே இன்னமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் இருக்கக்கூடிய கட்டத்திற்குள் வந்திருந்தால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறக்கூடிய அளவுக்கு தங்களை அர்ப்பணிக்கச் செய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். நேற்று மாலையிலே, ஜெப அட்டைகளைப் பெற்றிருக்காமல் தங்கள் கரங்களை உயர்த்தின மக்கள் மத்தியில் நீர் அசைவாடி, உமது மகத்தான பரிசுத்த ஆவியானவர் சென்று, வியாதிப்பட்டவரையும் பெலவீனப்பட்டவரையும் குணமாக்கி, அவர்களை பெயர் சொல்லி அழைத்து செய்த காரியங்களை நாங்கள் கண்டபோது, கர்த்தாவே, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களா யிருந்தோம். நீர் அதைச்செய்தபோது, நீர் பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் வாசமாய் இருக்கும்போது செய்தது போலவே இருந்தது. அதின் மூலமாக நீர் இன்னமும் உமது சபையில் வாசம் பண்ணுகிறீர் என்பதை காண்பித்தீர். மக்கள் ஸ்ட்ரெச்சர்களிலும் இருந்து எழும்பி நடந்தார்கள்; மரணப்படுக்கையில் இருந்தவர்கள், கடைசி நம்பிக்கையையும் இழந்திருந்த நிலையில், தேவனுடைய ஒளியைக் கண்டு, அதை ஏற்றுக் கொண்டு, சுகமடைந்து நடந்து சென்றார்கள். பரிசுத்த ஆவியோடுங்கூட உள்ள ஐக்கியத்திலே, இன்று காலையில் இம்மகத்தான கூட்டத்திலே, ஓ தேவனே, கிறிஸ்து இயேசுவோடுங் கூட உன்னதங்களிலே நாங்கள் வீற்றிருக்கிற வேளையிலே, எவ்வளவாய் நாங்கள் அதை நேசிக்கிறோம். 5நீர் இன்றிரவிலே, எமக்கு பரம ஆசீர்வாதங்களைத் தர வேண்டுமென ஜெபிக்கிறோம். எங்களுடைய தகுதிக்குறைவை நோக்கிப் பாராதேயும் கர்த்தாவே. ஏனெனில், நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறோம். எங்களைத் தகுதிப்படுத்த எங்களிடத் தில் எந்த ஒன்றுமேயில்லை. ஆகவே, நாங்கள் பிழையுள்ளவர்கள் என்று எங்களைப் பற்றி அறிக்கை செய்கிறோம். எங்களைத் தகுதிப்படுத்த எங்களிடத்தில் எந்த ஒன்றுமேயில்லை. ஆகவே, நாங்கள் பிழையுள்ளவர்கள் என்று எங்களைப் பற்றி அறிக்கை செய்கிறோம். நாங்கள் அநீதியுள்ளவர்களென்றும், நீர் ஒருவரே நீதியுள்ளவர் என்றும் அறிக்கையிடுகிறோம். நாங்கள் வேண்டிக்கொள்வதை அருளுவேன் என்று வாக்குரைத்து எங்களை அவர் அழைத்திருக்கிற படியினால், நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வருகிறோம். தேவனே, நான் உம்மிடத்திலே ஒரு மகத்தான காரியத்தைக் கேட்கப் போகிறேன்; என்னவெனில், இன்றிரவிலே, இங்கேயுள்ள ஒவ்வொரு இருதயத்தையும் பரிசுத்த ஆவியானவர் ஆராய வேண்டுமென வேண்டுகிறேன். அவர்களுக்கு சுகம் வேண்டுமெனில், அவர்களை சுகமாக்கியருளும் கர்த்தாவே. கர்த்தாவே, அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையா யிருக்கிறதோ அதை அளித்தருளும். இங்கேயுள்ள என்னை மறந்து விடாதேயும். இங்குள்ள இந்த அருமையான ஊழியக்காரர் குழுவை மறந்து விடாதேயும் கர்த்தாவே . நாளை அவர்களது சபை ஆராதனைகளை ஆசீர்வதியும். அவைகள் நிரம்பியிருக்கவும், அவர்கள் மத்தியில் தேவ ஆவியானவர் அசைவாடவும் செய்தருளும். இத்தேசத்திலே, ஆதிகாலத்துப் பாணியிலான எழுப்புதலானது ஏற்பட்டு, இத்தேசத்திற்கு வெளியிலும், அது பரவும்படி செய்தருளும். பிதாவே, எங்குமுள்ள எல்லா மக்களையும் ஆசீர்வதியும். இப்போதும், நான் இந்த சிலவசனங்களை வாசித்திருக்கிறதை எங்கள் இருதயங்களுக்கு ஆசீர்வாதமாக்கித் தாரும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வேண்டுகிறோம். ஆமென். 6காலைக் கதிரவன் எழும்பி மலைமேல் ஏறி வந்துகொண்டிருக்கும் போது, அவள் (தீர்க்கதரிசி , மரியாளைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) தனக்கு பழக்கமான அச்சிறிய தெரு வழியாக, தான் வாழ்ந்த மலையை விட்டு இறங்கி வந்து கொண்டிருக்கிறாள். வழக்கமாக அவளுடைய வயதையுடைய இளம் பெண்கள் என்னவிதமாக சிந்திப்பார்களோ, அதேவிதமாக அவளும் ஒருவேளை தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டே வந்து, சிந்தனை பண்ணினவளாய், தியானித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருக்கக் கூடும். அவள் தனது அன்றாடத் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கும்படி, நகரத்தில் கிணற்றை நோக்கி அவள் போய்க் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் அவளுடைய தாயார் ஏற்கனவே மரித்துப்போயிருந்தாள் என்றும் அவள் தனது வயது சென்ற தந்தையுடன் வாழ்ந்து வந்தாள் என்றும் நமக்கு கூறப்படுகிறது. அப்போது அவள் முந்திய தினத்தின் காரியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். 7அவர்களுடைய ஓய்வுநாள் ஆராதனைக்குப் பிறகு வரும் வாரத்தின் முதல் நாளாக அந்நாள் இருந்திருக்கவேண்டும். அன்று பாலஸ்தீனத்தின் நீலநிற ஆகாயத்தில் சூரியனானது உயர கிளம்பி வந்து கொண்டிருந்த வேளை அது. சூரியன் எழும்பி வருகையில், மலர்களின் இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மலர்கள், இன்னும் மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஆகிய அழகிய மலர்களைக் கொண்ட ஒருவகை தழுவும் கொடி வகைத் தாவரங்களிலிருந்தும் இனிய நறுமணம் வீசிக் கொண்டிருந்த சூழ்நிலை அது; காலையில் சூரிய வெப்பம் வீசும் முன்னர் உள்ள அவ்வேளை மிக அருமையானது. நான் அதை நேசிக்கிறேன். புத் துணர்ச்சியோடு கூடிய வேளையாக அது இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். அப்பேர்ப்பட்ட வேளைகளில் தோட்டங்களில் செல்ல நான் விரும்புவேன். ஒரு ஊழியக்காரனானவன் பிரசங்க பீடத்திற்கு வருகையில் பல வித கவலைகளைக் கொண்டவனாய் வரக்கூடாது; ஆனால் கர்த்தருடைய பிரசன்னத்தின் புத்துணர்ச்சியோடு கூட அவன் வரவேண்டும். பிசாசுகளெல்லாம் இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றிருக்கும் அதிகாலை வேளையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கவேண்டும். அவ்வேளையில் தானே, எல்லாம் அமரிக்கையாகவும், ஓய்ந்திருப்பதாகவும் இருக்கிறது. இனிமையான நற்கந்தம் வீசும் வேளையாக அது இருக்கிறது. ஒரு ஊழியக்காரன் அவ்விதமாக பிரசங்கபீடத்திற்கு வரும் வரையிலும் தேவனுக்கு முன்பாக காத்திருந்து விட்டு பிறகு வந்தால், வாசனை வீசும் நற்கந்தமாக பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டவனாக, பசியோடு காத்திருக்கும் மக்களுக்கு தேவசெய்தியை கொண்டு வருகிறவனாக இருப்பான். 8நான் இதை ஒரு சிறிய நாடகத்தைப் போல் அந்நிகழ்ச்சிகளை கோர்த்து விவரிப்பேனாக. அவள் அவ்விதமாக தன் பாதையில் நடந்து செல்லுகையில், முந்தின தினம் நடந்ததைப் பற்றி அவள் சிந்தித்தாள் என்று எண்ணுகிறேன். அந்நாட்டின் வழக்கத்தின்படி, அவளைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துக் கொண்ட யோசேப்பும் அவளுமாகத்தான் சேர்ந்து ஜெப ஆலயத்திற்கு சென்றுவிட்டு, மதிய உணவுக்காக இருவரும் சேர்ந்து வீடு வருவதுண்டு. அவ்விதமாக உணவானது ஆயத்தப்படுத்தப்பட்டபோது, அவர்கள் இருவரும் வீட்டு வெராந்தாவில் மலைக்கு எதிராக உள்ள பள்ளத்தாக்கை நோக்கிய வண்ணமாக அமர்ந்து தங்கள் உணவை உண்டார்கள். யோசேப்பு ஒரு தச்சனாயிருந்தான். அவன் அந்த அழகான இளம் யூதக் கன்னிகையை விவாகம் செய்யப்போவதை அறிந்தவனாய், அவன் ஒருதச்சனாயிருந்தபடியால், மற்றொரு மலையின் மேல் தங்களது எதிர்கால வீட்டை நிர்மாணித்துக் கொண்டிருந்தான். அவன் தனது அழகான இளம் மணவாட்டியை அவ்வீட்டிற்கு கொண்டு வரப்போகிறபடியினால், அவ்வீட்டை உருவாக்குவதில் விசேஷித்த வேலைப்பாட்டைக் கொண்டதாக அது இருந்திருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். கதவுகள் சரியாகப் பொருந்தவேண்டும். அவசர கோலத்தில் இந்த வேலை செய்யப்படக்கூடாது என்று அவன் விரும்பினபடியால், இவ்வேலைக்காக அவன் போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தான். ஜன்னல்கள் சரியாக பொருந்தியிருக்க வேண்டும், கதவுகளும் அவ்வாறே சரியாக இருக்கவேண்டும். வாயிற்கதவின் வழியாக அவன் உள்ளே நுழைகையில் அவ்வாயிற் கதவு இதயத்தின் வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும் எனக் கருதி, அவன் கதவை செய்யப் போகையில் அதை இதயத்தின் வடிவத்தில் அமைத்திட இருந்தான். வீட்டைச் சுற்றிலும் ரோஜா மலர்கள்... நான் இப்படியாக கற்பனை செய்கிறேன். 9அவர்களுடைய விவாக நிச்சயதார்த்தம் நடந்தது முதற்கொண்டு, அவர்கள் இதை சில காலமாக திட்டமிட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஞாயிறு மதியத்திலே அங்கே அவர்களிருவரும் சென்று, வெராந்தாவில் அமர்ந்து, எதிரே அமையப்போகும் தங்களது எதிர்கால வீட்டை நோக்கிய வண்ணம் இருந்தார்கள். அவர்களிருவரும் தேவனிடத்தில் விசுவாசங்கொண்ட விசுவாசிகளாக இருந்தபடியினால், அவர்கள் கர்த்தரைக் குறித்துப் பேசுவது வழக்கம். இந்த ஞாயிற்றுக் கிழமையானது விசேஷித்த ஒன்றாக இருந்தது. உணவை விரைவாக உண்டு முடித்துவிட்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவி முடித்தனர். மரியாள் வேலையையெல்லாம் முடித்துவிட்டு, வெராந்தாவுக்கு வரும்போது, ஏற்கனவே அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவர்களுக்கிடையே அப்போது நடந்த சம்பாஷணையானது இவ்விதமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்கள் வழக்கமாக தங்களுடைய வீடு எவ்வித வடிவம் கொண்டிருக்க வேண்டுமென்றும், அது எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் பற்றியும், ரபிமார்கள் அவர்களோடு கூட விருந்துக்கு வருவதைப் பற்றியும் பேசிக்கொண்டிப்பது உண்டு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, அவர்களுடைய சம்பாஷணையானது, அன்று காலையிலே ஜெப ஆலயத்திலே கனம் பொருந்திய, புகழ் பெற்ற அந்த ரபி ஒருவரின் பிரசங்கத்தைப் பற்றியதாக இருந்தது. ஒருவேளை, மரியாள், ''யோசேப்பே, இன்று காலையில் நமது பிரியமுள்ள மேய்ப்பராகிய ரபீ பிரசங்கித்த அச்செய்தி, கவனத்தைக் கவருவதாக இருந்ததல்லவா?'' என்று கூறியிருப்பாள். 10“ஓ, அது மிகவும் குறிப்பிடத்தக்கதான ஒரு செய்திதான்'' என்று யோசேப்பு பதிலளித்திருப்பான். அவன் தொடர்ந்து கூறியதாவது; ''அவர் மகத்தான யெகோவா தேவனானவர், நமது ஜனங்களை எகிப்தை விட்டு புறப்படச் செய்ததைக் குறித்து பேசியதை நான் மிகவும் விரும்பினேன். யாத்திராகமப் புத்தகத்தின் தோற்சுருளை அவர் எடுத்து, அதிலிருந்து, அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டபோது, எவ்வாறு யெகோவா அவர்களை அக்கினி ஸ்தம்பத்தினால் நடத்தினார் என்பதை வாசித்தபோது, அது உன்னை மெய்சிலிர்க்க வைக்கவில்லையா? அவர்கள் புறப்பட்ட போது அவர்களை திசைகாட்டி அழைத்துச்செல்ல அவர்களுக்கு ஒரு திசைகாட்டும் கருவிகூட அவர்களிடம் இருக்கவில்லை; ஆனால் அவர்கள் ஆவியானவரின் வழிநடத்துதலின்படி புறப்பட்டுப் போனார்கள். ஓ , மரியாளே, நம்முடைய வாழ்நாள் முழுவதும், அந்த அக்கினி ஸ்தம்பத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருக்கவும், அவர்கள் வழி நடத்தப்பட்டது போல், அதினால் நாமும் வழிநடத்தப்படுவது அற்புதமாயிருக்குமல்லவா?” என்று கூறினான். ''அவர்களுக்கு உணவு தேவையாயிருந்தபோது, அவர் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவை வருஷித்தார். அதினால் அவர்களுக்கு அப்பம் கிடைத்தது. அவர்களுக்கு இறைச்சி தேவைப்பட்ட போது, கடற்கரையிலிருந்து காற்று அடித்து காடைகளைக் கொண்டு வந்து குவித்தது. அவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது, அடிக்கப்பட்ட கன்மலையை உடையவராக அவர் இருந்தார். அவர்கள் வியாதிப்பட்டபோது, அவர்களுடைய வியாதிகளுக்குப் பரிகாரமாக, அவர் ஒருவெண்கல சர்ப்பத்தை உடையவராக இருந்தார். ஓ, அது எத்தனை மகத்துவமானது!'' என்று தொடர்ந்து கூறினான். அவன், மேலும் கூறினான்; ''ஆனால், என் அன்பே , அந்த ரபி, ''ஆனால் யெகோவா அதற்குப் பிறகு, இனிமேல் அதுபோல் செய்வதேயில்லை'' என்று கூறியபோது, எல்லாவற்றையுமே கெடுத்துப்போட்டார். அது எப்படியிருந்தபோதிலும், யெகோவா எப்போதும் மாறாதவராயிருக்கிறார் என்றே நான் சதா விசுவாசித்து வந்திருக்கிறேன். அவர் தவறிப்போகவே முடியாது. நமது ஜனங்கள் யெகோவாவின் பேரில் விசுவாசத்தை இழந்துவிட்டபடியினால் தான், இப்படிப்பட்டதான நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். 11அவர் அழியாமையுள்ளவர், அவர் முதிர்வயது அடைவதில்லை, அவர் வாடிப்போவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் அதேயெகோ வாவாக இருக்கிறார், அவர் மாறுவதேயில்லை, நம்மிடம் அவர் எதை எதிர்பார்க்கவில்லையென்றால்... கனம் பொருந்திய அந்த ரபியை நான் அவமதிக்கவோ, அவமரியாதை செய்கிறேன் என்றோ நான் என்னைக் குறித்து எண்ணவில்லை. ஆனால் அவர் இன்று காலைச் செய்தியிலே, யெகோவா இனிமேல் எந்தவித அற்புதமும் செய்வதில்லையென்றும், இப்போது நம்மிடம் அவர் எதிர்பார்ப்பதெல்லாம், ஒழுங்காக சபைக்குப் போவதும், நமது தசமபாகங்களை செலுத்துவதும், நம்மால் முடிந்த அளவு நல்ல ஜீவியம் செய்ய வேண்டுவதும்தான்; அப்போது அவர் நம்மை மகிமையில் பரம் வீட்டிற்கு எடுத்துச்செல்வார்“ என்று பிரசங்கித்தபோது, மரியாளே, என்னால் அதை விசுவாசிக்க முடியவில்லை. அந்நாளிலே, அவர்கள் எவ்வாறு அவரோடு நடந்தார்களோ, அதேபோல் நாமும் அவரோடு நடக்க வேண்டுமென்றுதான் யெகோவா விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறினான். “என் பிரியமே, நாம் முதலில் வேதவாக்கியங்களை வாசிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா'' என்று மரியாள் அப்போது சொல்லியிருக்க வேண்டும். நல்லது, நீங்கள் எப்போதாவது பாலஸ்தீனிய வீடுகளுக்குப் போய் அங்கே பழங்காலத்திய நில எல்லைக்குறிகளைப் பார்த்திருந்தால்... வேதாகமத்தின் புத்தகங்கள் ஒரு கம்பைப்போல், புத்தகச் சுருளாக சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். அதை அவர்கள் குப்பைபோடும் கூடை போன்றதொரு தோற்றமுள்ள ஒருகொள்கலத்தில் போட்டு வைப்பார்கள். அவைகள் இக்கொள்கலத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். ஏசாயாவின் புத்தகச்சுருள் எரேமியாவின் புத்தகச்சுருள் இன்னும் ஏனைய தீர்க்கதரிசிகளின் புத்தகச் சுருள்களும் அங்கே வைக்கப்பட்டிருக்கும்; அவர்கள் எதை எடுத்துப் படித்தாலும் எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், அவை யாவும் தேவனால் அளிக்கப்பட்டவையாகும் என்று அவர்கள் அறிந்திருந்தனர்; ஏனெனில் அவர்கள் யாவரும் அவர்களுடைய தீர்க்கதரிசிகளாவார்கள். 12ஆகவே, யோசேப்பு, நல்லது, என் பிரியமே, நீ போய் அப்புத்தகச் சுருள் ஒன்றினை எடுத்து வருவாயா'' என்று கேட்டான். அவள் போய் குறிப்பிட்ட ஒரு சுருளை எடுக்காமல், தன்கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தாள். 'நல்லது, என் அன்பே, இன்று நாம் வாசிக்கும்படியாக நமக்கு ஏசாயாவின் புத்தகம் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது“ என்று அவள் கூறினாள். ஆகவே அவன் அச்சுருளை திறந்தபோது, அவனது கண்கள், ''...இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்...'', ''... அவர் நாமம், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், சமாதானப்பிரபு, நித்திய பிதா...'' என்ற வசனங்களின் பேரில் விழுந்தது (ஏசாயா 7:14, 9:6). அவன் வாசித்து முடித்தபோது, அவனது அருகில் அமர்ந்திருந்த அந்த சிறிய கன்னிகை, ''என் பிரிய யோசேப்பே, சற்றுபொறுங்கள், கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று என்ன அர்த்தத்தில் தீர்க்கதரிசி அங்கே கூறுகிறார்?'' என்று கேட்டாள். நல்லது, அப்போது, யோசேப்பு, “அன்பே, இது எனக்கு சற்று மிகவும் ஆழமாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அதை நான் விசுவாசிக்கிறேன். வேதாகமம் அப்படித்தான் கூறு கிறது. அது எவ்வாறு சம்பவிக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றைமாத்திரம் நாம் அறிவோம்; ஏசாயா, யெகோவாவின் தீர்க்கதரிசியாக விளங்கினான் என்பதை நாம் அறிவோம். ஆகவே, தேவனுடைய பரிசுத்த ஆவியினால் தன்மேல் அபிஷேகிக்கப்பட்டவனாயிருந்த அவன் தவறாக தீர்க்கதரிசனம் உரைத்திருக்கவே முடியாது. ஏனெனில் அவன் ஒரு தீர்க்கரிசியாகவே பிறந்தான் என்றும், அவனது வார்த்தைகள் யாவும் உண்மையென்றும் நாம் அறிந்திருக்கிறோம். ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று அவன் கூறியபோது, அது ஏசாயா அல்ல; அது நமது யெகோவாவேயாகும்; யெகோவா, அவர் தாம் செய்யப் போவதாகக் கூறும் எதையும் செய்ய அவரால் கூடும்” என்று கூறினான். 13அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டே வந்து, பிறகு அவர் நாமம், “ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவருடைய இராஜ்யத்திற்கு முடிவிராது என்பதைப்பற்றியெல் லாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவள் கூறியதாவது; ''மோசே தீர்க்கதரிசி , வாக்குரைத்து, ''உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு திருக்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்...'' என்று கூறியிருந்தானே, அவர் தான் அவ்வசனம் குறிப்பிடுபவர்ராக இருக்க வேண்டும் (உபாகமம் 18:15). ஆகவே அவர் மேசியாவாகத் தான் இருக்கவேண்டும். அதற்கு யோசேப்பு, “வேதபாரகர்கள் அவ்வசனத்தை அப்படியாகத்தான் வியாக்கியானிக் கிறார்கள். அது வரவேண்டியவரான மேசியாவைப் பற்றிய வசனந்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்'' என்று கூறினான். மாலைப் பொழுதானது அவ்வாறு கடந்தபோது, இரவு ஆராதனை நேரம் நெருங்குகிறது. அவர்கள் மீண்டும் சபைக்கு சென்றார்கள். 14அதற்கடுத்த நாள் காலையில்தான் அவள் தண்ணீர் கொண்டுவரும்படி சென்று கொண்டிருக்கையில், வழியில் யோசேப்பு அவர்களுடைய வீட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சப்தம் கேட்டது. அவள் எழுந்து தனது காலை உணவை உண்டபிறகு, அவள் குடத்தை எடுத்துக்கொண்டு, நகரத்தின் பொது கிணற்றுக்குப் புறப்பட்டுச் சென்றாள். இப்போதும், நமக்கு நேரம் இருந்தால், அக்கிணற்றைக் குறித்து, சிறிது நேரம் பேசிட விரும்புவேன். ஆனால் நமக்கு போதிய நேரம் இல்லை. அவ்வாறு அவள் தன் சிரம் தாழ்த்தி சிந்தனை பண்ணிக்கொண்டே போய்க்கொண்டிருக் கையில், அவளால் முந்தின தினத்தின் சம்பாஷணைகள் அவள் நினைவை விட்டு அகலவேயில்லை. அவள் தனக்குள் பேசிக் கொண்டாள்; “யோசேப்பு ஏசாயா 9:6-ன் வேத வாக்கியத்தை வாசிக்கையில், நான் அந்த இடத்தில் அவரை இடைமறித்தபோது, யோசேப்பு கூறிய கருத்து என்னை என்னவோ செய்தது. அவர் என்னிடம் கூறினார்; ''என் பிரியமே, நான் பார்த்தவர்களுக் குள்ளே, நீ தான் மிகவும் அழகானவள்; ஆனால் எவ்வாறோ கடந்த சில நிமிடங்களாக நீ முன் எப்பொழுதையும் விட இப்போது, மிகமிக அழகுள்ளவளாக காணப்படுகிறாய்; உனது பழுப்பு நிற கண்கள் பளிச்சிடுகின்றன. இந்த குறிப்பிட்ட வேதவாக்கியத்தை நாம் குறிப்பிட்டபோது, அது உன்னை மெய்சிலிர்க்க வைத்ததா? அல்லது என்ன சம்பவித்தது?'' என்று கேட்டான். அவள் தனக்குள் வியந்து கொண்டாள், ''... ஒரு பாலகன் பிறந்தார், ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்'' (ஏசாயா 9:6) என்ற வசனத்தை அவர் வாசித்தாரே, அதன் அர்த்தம் என்ன? நான் அதைப் பற்றி இவ்வாறு சிந்திக்கிறேனே அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்'' என்று எண்ணினாள். அப்போது தானே, அந்த சிறிய பெண்மணி நடந்து கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று மினுக்குமினுக்கென ஒளிர்கிறதைக் கண்டாள். அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். எங்கோ ஒரு பாலைவன மலையின்மேல் பிரகாசித்த சூரியனாகத்தான் அவ்வொளி இருக்க வேண்டும் என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். அவள் அவ்வாறு தன் வழியில் சென்று கொண்டிருக்கையில், என்ன சம்பவித்தது என்பதைப்பற்றி அவள் சிந்தனை பண்ணினாள். தாங்கள் பேசிக்கொண்டவைகளை குறித்தும் அவள் சிந்தனை பண்ணிக்கொண்டே போகையில், அவள் நகரத்தின் கிணற்றுக்குப்போகிற ஒரு திருப்பத்தில் திரும்பினாள். அக்கிணற்றண் டையில் தான் அதிகாலையில் பெண்மணிகள் கூடி, தங்கள் வாளிகளைக் கொண்டு தண்ணீர் இறைப்பார்கள். மண் ஜாடி அல்லது கூஜா - அதற்கு இரு கைப்பிடிகளோடு, நீண்ட கழுத்துள்ளதாக அது இருக்கும். அதில் ஒரு கொக்கியினால் மாட்டப்பட்டு, இராட்டினத்தைக் கொண்டு இறைக்கலாம். அவ்விதமாக அந்த ஜாடியை கிணற்றுக்குள் இறக்கிவிட, அது தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு அதை மேலே இழுத்து, எடுத்து, தங்கள் தலைகள் மேல் வைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பி வருவார்கள். அது களிமண்ணினால் ஆனதாகும். அக்குடம் ஐந்து அல்லது ஆறு கேலன்கள் (1) கேலன் என்பது அமெரிக்கக் கணக்கில், மூன்றே முக்கால் லிட்டர்கள் ஆகும் - தமிழாக்கியோன்) தண்ணீர் பிடிக்கக் கூடியவைகளாக இருக்கும். அவர்கள் சுத்தம்பண்ணிக்கொள்ள, குளிக்க, இவைகளுக்குப் போவதாயிருந்தாலொழிய மற்றபடி இந்த அளவு தண்ணீர் அவர்களுக்கு அன்றைய தினத்திற்குப்போது மானதாகும். வழக்கமாக அவர்கள் இதற்காக அந்த இடங்களுக்கே செல்லுவார்கள். 15இப்பொழுது, அவள் மீண்டும், அத்திருப்பத்தில் திரும்பும்போது, அவ்வொளி பளிச்சிடுகிறதைப் பார்த்தாள். அவள் அந்த இடத்தில் ஒரு ஆள் மட்டும் கடந்து செல்லக்கூடிய பாதையை கடந்து செல்ல வேண்டியவளாய் இருந்தபோது, அங்கே எதிரில் பிரதான தூதனாகிய காபிரியேல் நின்றிருந்தான். ஒளி பிரதிபலித்ததைக் கண்டாளே அது சூரியனுடைய ஒளி அல்ல. அத்தூதன் அவளை பின்பற்றிச்சென்று கொண்டேயிருந்தான். அவள் அவனை முகமுகமாய் எதிர்கொள்ள வேண்டியதான ஸ்தலத்தில் அவளை செல்லவிட்டு, அங்கே அவளை சந்தித்தான். அவள் உற்றுநோக்கினாள்; அவன் தன்னைச் சுற்றிலும் ஒளி பிரகாசித்த வண்ணம் இருந்ததால், திகிலடைந்த வளாய் அச்சிறிய கன்னிகை, நிச்சயமாகவே, தனது தண்ணீர் குடத்தை இறுகப்பற்றிக் கொண்டவளாய், தன் பெரியகண்கள் ஆச்சர்யத்தால் விரிந்த நிலையில், பிரதான தூதனை நோக்கிப் பார்த்தாள். ''... மரியாளே வாழ்க, தேவனிடத்தில் கிருபை பெற்றவளே...'' என்று அவன் கூறினான் (லூக்கா 1:28, 30). ஓ, நான் அதை விரும்புகிறேன். உலகில் அந்நாட்களில் மிகவும் கீழ்த்தரமானதொரு நகரமாக அவள் வாழ்ந்த நகரம் விளங்கியது. அல்லது பாலஸ்தீனத்திலேயே மிகவும் கீழ்த்தரமான நகராக அது விளங்கியது. (நாசரேத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது - தமிழாக்கியோன்) அப்படிப்பட்ட நகரத்தில் தான், அவள் தேவன் தாம் செய்யப்போகிறதான ஒரு குறிப்பிட்ட வேலைக்காக அவளைத் தெரிந்துகொள்ளத் தகுதியானதொரு ஜீவியத்தை அவள் செய்தாள். அவள் நேருக்கு நேராக அவன் முகத்தைப் பார்த்தாள்; அது அவளை திகைப்படையச் செய்தது. 16இப்படிப்பட்டதான காரியங்களைப் பற்றி வழக்கமாக நாம் சிந்திக்கையில் ... ''... புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளை யேசிந்தித்துக் கொண்டிருங்கள்.'' (பிலிப்பியர்4:8) என்று வேதாகமம் கூறுகிறது. வேறு பலகாரியங்களிலேயே நமது சிந்தைகள் பதிந்திருக்க நாம் செய்கிறோம். அக்காரணத்தினால்தான், நம்மால், நாம் காண்கிறவை களைவிட மேலான காரியங்களை காணமுடியாதிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். நாம் நமது சிந்தைகளை மேலான காரியங்களில் பதிந் திருக்கச் செய்வோமென்றால், இப்பொழுதும் கூட தூதர்கள் நமக்கு காட்சியளிக்க முடியும் என்று நான் கருதுகிறேன். ஆனால் நாமோ, அந்நிய காரியங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எங்கே நான் போகவேண்டும்; நாம் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட திட்டம் பற்றியும், ஒரு குறிப்பிட்ட ஷாப்பிங் போவது பற்றியும் நாம் சிந்திக்கிறோம். ஆனால் நம்முடைய வேதமோ, 'முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்'' என்று கூறுகிறது (மத்தேயு 6:33; லூக்கா 12:31). அப்பொழுது அவன், ''நீ தேவனிடத்தில் கிருபை பெற்றவள்...'' என்று அவன் கூறுவதை நாம் அங்கே காண்கிறோம்; 17நாம் மீண்டும் காண்கிறதென்னவெனில்... இவ்வேதவாக்கியத்தை விட்டு நான் அகன்றுவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். எம்மாவூருக்குப்போகிற வழியில், கிலெயோப்போ என்பவனும், அவனுடைய நண்பனுமாக இதயம் உடைந்தவர்களாக போய்க்கொண்டிருக்கிற பொழுது, அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு மரித்துப்போன இயேசுவைக் குறித்துப் பேசிக்கொண்டும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்புவதைக் குறித்துக் கூறப்பட்டவைகளை பற்றியும் பேசிக்கொண்டே சென்றனர். ஆனால் அவர்கள் விசுவாசிக்கவில்லை. ஒருவேளை திங்கட்கிழமை காலையிலே மீண்டும் வேலைக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறதாக இருந்திருக்கும். அப்பொழுது அவர்கள் அவரைக் குறித்து சிந்தனை பண்ணிக்கொண்டே சென்றபொழுது தான் அவர் அவர்களுக்கு தரிசனமானார். புதர்களின் பின்னாலிருந்து வெளிப்பட்டு அவர்களோடு ஒருசாதாரண மனிதனைப்போல் பேசினார். (லூக்கா. 24:13, 15). ''ஓ, ஏன் நீங்கள் மிகவும் களைப்புற்றுயி ருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்?'' அவர்கள் அவரிடம், ''இங்கே நீர் ஓர் அந்நியரா?'' என்று கேட்டார்கள் (லூக்கா . 24:18). நீங்கள் விசுவாசிக்கிறீர்களா...? இப்பொழுது இவ்விஷயம் சற்று மிகவும் உணர்ச்சிகரமான கருத்துக்குரிய விஷயமாகும். ஆனால் இவர்கள் அவரோடு நடந்தவர்கள்; அவரோடு பேசியவர்கள், தினந்தோறும் அவரோடு நடந்தவர்கள்; உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அதே இயேசு வைத்தான் கண்டார்கள், ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை. அவர் தம்மை யாருக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ, அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துவார். ஓ, அவர் தாமே நம் ஒவ்வொருவருடைய கண்களிலிருந்தும் காணமுடியாதபடி தடுக்கிற செதில்களை அகற்றிப் போடுவாராக; இக்கட்டிடத்திற்குள் வந்திருந்து, தம்மை தமது உயிர்த்தெழுதலின் வல்லமையிலே வெளிப்படுத்த வேண்டுமென்றும், அதினால் ஒவ்வொரு நபரும் அவரைக் காணத்தக்கதாக செய்யவும், பாவி அவரை இரட்சகராகவும், வியாதிப்பட்டவர் அவரை குணமாக்குகிறவராகக் காணவும் செய்ய வேண்டுமென்று இன்றிரவில் நான் ஜெபிக்கிறேன். அந்நாள் முழுவதும் அவர் அவர்களோடு நடந்து சென்றார் என்பதாக நாம் காண்கிறோம். அப்பொழுது, அவர் அவர்களை விட்டு விலகி அப்புறம் போகிறவர் போலக்காண்பித்தார் (லூக்கா 24:28). ஓ, அவர்களோ, அவரை உள்ளே வரும்படி வருந்திக்கேட்டுக் கொண்டார்கள் (லூக்கா. 24:29). ஓ, இயேசுவே, நீர் இன்றிரவில் சபையில் இருக்கிறீர். நீர் என்னோடு வீட்டுக்கு வரவேண்டும். நான் உம்மை என்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். உம்முடைய சமூகத்தைப் பற்றிய இந்நல்லுணர்வை நான் இழந்துவிட விரும்பவில்லை. நான் உம்மை என்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வேனாக; நீர் வந்து என்னோடு தங்கியிரும். இவ்வுணர்வை நான் இழக்கவிரும்பவில்லை அவ்விதமாக இருப்பது அற்புதமாக இருக்கவில்லையா? 18இங்கே நான் என் செய்தி பிரசங்கித்தலை சற்று நேரம் நிறுத்தி விட்டு நான் அபிஷேகிக்கப்பட்ட பொழுது, நான் இதுவரை காணாததை கண்டபொழுது நேரிட்டதான மிகவும் மகிமையான காரியங்களைப் பற்றி கூறவிரும்புகிறேன். எப்பொழுதும் அங்கே நான் தங்கித் தரிக்கக் கூடுமானால், அதையே நான் விரும்புகிறேன். புத்தி சுவாதினமில்லாதவன் அன்றிரவிலே மேடையில் ஓடி வந்து என்னைக் கொலை செய்ய முற்பட்டதைப் பற்றி நீங்கள் புஸ்தகத்தில் வாசித்திருப்பீர்கள். எங்கே அது நடந்தது? போர்ட்லேண்டில்தான். சகோ. ஜேக், நீங்கள் அங்கே இருந்தீர்களல்லவா? அல்லது சகோ. ப்ரெளன் அங்கே இருந்தார்; அப்பொழுது அந்த புத்திசுவாதீனமில்லா தவன் என்னைக் கொல்ல ஓடி வந்து, கொலை செய்யப்போவதாக மிரட்டினான். அவன் ஒரு கட்டுமஸ்தான ஆள். அவனை வெறுப்பதற்குப் பதிலாக நான் அவனை நேசித்தேன். அவன் அதை செய்திருக்கமாட்டான். அவன் என்னைப் போல ஒரு குடும்பஸ்தனாக இருந்திருக்க வேண்டும்; அவன் அதை செய்திட விரும்பியிருக்கமாட்டான். அதைச் செய்யவேண்டுமென்று இருந்தது அவன் மேல் இருந்த பிசாசேயாகும். நான் அவனை நேசித்தபொழுது அவனைப் பற்றி நான் அப்பொழுது பயமடைய வில்லை. அன்பு பயத்தை புறம்பே தள்ளும். நீங்கள் அன்பை காட்டும் பொழுது அவ்வாறு நடக்கிறது. எனது வீட்டிற்கு ஓபஸ்ஸம் என்னப்படும் அவ்விலங்கு வந்ததைப் பற்றிய சங்கதியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது தாயாக இருந்தது. (ஓபஸ்ஸம் என்னப்படும் அவ்விலங்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்படுவது, அது தமிழில் பைக்கீரி என்று அழைக்கப்படுகிறது. அது தன் குட்டிகளை தன் வயிற்றிலுள்ள பையில் சுமந்து செல்லும் - தமிழாக்கியோன்). ஒரு சமயம் ஒரு காளையெருதானது என்னை கொல்லும்படி வயல்வெளியிலே எனக்கு எதிர்ப்பட்டு எனக்கு முன்பாக எதிர்த்து ஓடி வந்தது. நான் வேட்டை அதிகாரியாயிருந்தபடியால், துப்பாக்கியை எடுக்க விரைந்தேன். நான் அம்மிருகத்தை வெறுத்தபடியினால் அல்ல. நானோ துப்பாக்கியை எனது காரில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். நான் அவ்வாறு செய்துவிட்டதற்காக அதற்கு பிறகு சந்தோஷப்பட்டேன். அம்மிருகம் எனக்கு நேரே ஓடி வந்தது. நல்லது, நான் மரிக்க வேண்டியிருந்தாலும், அதை நோக்கிப் பார்த்துக் கொண்டே மரிப்பேன்; நான் அதனிடத்தினின்று தப்பவே முடியாது. தப்ப வேறு மார்க்கமேயில்லை...' என்று எண்ணினேன். நான் மேலும், ''நான் அவ்வாறு மரிக்க நேர்ந்தாலும் அதை உற்று நோக்கிக் கொண்டே போக விரும்புவேன்' என்று எண்ணினேன். அது அவ்வாறு செய்தபொழுது, அது எனக்கு நேரே ஓடிவந்தது, ஏனெனில் எப்படியாகிலும் அது என்னைப் பிடித்து விடக்கூடிய நிலையில் இருந்தது. அதன் மூக்கில் ஒரு சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் ஒரு கருப்பு மனிதனை அம்மிருகம் கொன்றிருந்தது. அது வெளியிலே இருந்தது என்பதை நான் மறந்து போய்விட்டேன். ஒரு வியாதிப்பட்ட ஒரு மனிதனுக்காக ஜெபிக்கப் போவதற்காக இருந்தேன். அது தன் முழங்காலை தாழ்த்தி புழுதியை தட்டி கிளப்பி விட்டுக் கொண்டு உறுமிக்கொண்டு நெருங்கி வந்தது. 19ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஒரு காரியம் சம்பவித்தது. எப்பொழுதும் ஒரு சுகமளித்தல் நடக்கும்பொழுது, அல்லது ஏதாவது நடக்கையில் ஒரு காரியம் சம்பவிக்கிறது. ஒரு அன்பானது அங்கே வந்து தடையாயிருக்கிற எந்தவொன்றையும் நடுவில் இராதபடிக்கு அகற்றிப் போட்டுவிடுகிறது. ஓ, சகோதரரே, நீங்கள் விரும்புமளவுக்கு எல்லா வித மதபோதகத்தையும் உடையவராக நீங்கள் இருக்கலாம் என்று உங்களுக்குக் கூறுகிறேன்; ஆனால் எனக்கு எப்போதும் அன்பையே கொடுங்கள். ''... காயத்தில் ஓடும் இரத்தத்தை விசுவாசத்தால் கண்டேன்; ஒப்பற்ற மீட்பர் நேசத்தை கொண்டாடிப் போற்றுவேன்...'' அன்பு. ஓ, எப்போதும் அவ்விதமான சூழ்நிலையிலேயே மட்டும் நான் வாழ முடிந்தால்... அவ்வாறு அம்மிருகம் எனக்கு எதிரே தோன்றிய பொழுது, நான் அதனிடம், ''தேவனுடைய சிருஷ்டியே, நான் தேவனுடைய ஊழியக்காரன்; அவருடைய வியாதிப்பட்ட பிள்ளைகளில் ஒருவருக்கு ஜெபிக்கும் படி போய்க்கொண்டிருக்கிறேன். இப்போதும், நான் உன்னுடைய எல்லையில் இருக்கிறேன். நான் உன்னுடைய பகுதியிலே இருக்கிறேன். உன்னை தொந்தரவு செய்ய வேண்டுமென்னும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பின்னால் திரும்பிப் போய், படுத்துக்கொள். நான் உன்னை தொல்லை செய்யமாட்டேன்'' என்று கூறினேன். அது முன்னோக்கி வருவது போல் பார்த்தது. அது மிகவும் முடிந்த அளவு முன்னேறி வந்தது. நான் இப்போது எவ்வாறு பயப்படாமல் நிற்கிறேனோ, அதே போல், பயப்படாமல் அசையாமல் நின்றேன். எனக்கு மூன்று அடி தூரம் வரைக்கும் வந்துவிட்டு அத்தோடு அது நின்றுவிட்டது. அது என்னை நோக்கிப் பார்த்தது. அது மிகவும் வலுவிழந்ததாகக் காணப்பட்டது. பின்னால் திரும்பி நடந்து சென்று படுத்துக்கொண்டது. அதற்கு இரண்டுஅடி தூரம் அருகாமையில் நான் அதைக் கடந்து சென்றேன். அது ஜெயங்கொள்கிறது. ஒரு காரியம் சம்பவிக்கிறது, ஒரு காரியம் நடக்கிறது. 20அன்றொரு இரவிலே மெக்சிகோவில் நடந்ததைப் பற்றி நான் உங்களுக்குக் கூறினேன். அப்போது சகோதரன் ஜேக் அவர்களும் அங்கே இருந்தார்கள். ஒரு வயது முதிர்ந்த மெக்சிகோவினனாகிய மனிதன் மேடைக்கு வந்தார். அவர் முழுவதும் குருடாகவும், ஏழையாகவும் இருந்தார். அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் மோசமாக நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு புசிக்கக் கூட ஒன்றும் இல்லை. இந்த வயது சென்ற மனிதன் பாதரட்சைகள் அணியாமல் இருந்தான். அவர் தன் கையில் கையினால் தைக்கப்பட்டிருந்த ஒரு பழைய தொப் பியை வைத்திருந்தார். ஒரு பழைய கிழிந்த கோட்டை அணிந்திருந்தார், கால் சட்டைகள் ஏறக்குறைய முழங்கால் வரைக்கும் தூசி படிந்ததாயிருந்தது. அவர் மேடையின் மேல் சிறிய உருள் மணியை கொண்ட ஜெப மாலையை உருட்டிக் கொண்டே வந்தார். அவர் என்னிடமாக ஏதோ சொல்லிக் கொண்டே நெருங்கி வந்தார். யாரோ அவரை வழி நடத்திக் கொண்டு வந்தார். நான் அவரை நோக்கிப் பார்த்தேன். இன்னொரு மனிதனின் நிலைமையை நீங்கள் உணராவிட்டால், உங்களால் அவருக்கு ஒருபோதும் உதவிட முடியாது. அது சரிதான். அக்காரணத்தினால் தான் ... தேவன் உலகத்தை மிகவும் நேசித்தார்; அதற்காக அவருக்கு ஒரு உணர்வு இருந்தது. நான் அவரை நோக்கிப் பார்த்தேன். ''இதோ இவர் வந்திருக்கிறார்; ஒருவேளை அவருக்கு எங்கோ கொஞ்சம் பிள்ளைகள் இருக்க வேண்டும். அவர்கள் நாளொன்றுக்கு கொஞ்சம் பீசோக்களுக்காக (மெக்சிகோ நாட்டு நாணயத்தின் பெயர் பீசோ என்பதாகும் - தமிழாக்கியோன்) வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, இப்படியிருந்துங் கூட, அவருக்கு அவருடைய வாழ்க் கையிலே நல்ல உணவு ஒரு போதும் கிடைத்திருக்காது. அவ்விதமான நிலையில் இங்கே இருக்கிறார். அவருக்கு இயற்கை மிகவும் மோசமாக இருந்துள்ளது, அவருடைய நிலை அவரை குருடாக்கிவிட்டது'' என்று நான் எனக்குள் எண்ணினேன். அவருடைய பக்கமாக நான் நகர்ந்து சென்றேன். நான் இங்கே நல்லதொரு சூட் அணிந்துள்ளேன். ஒருஜோடி நல்ல ஷக்களை அணிந்துள்ளேன்'' என்று எண்ணினேன். தன் வாழ்க்கையில் அவன் எப்போதா வது ஒரு ஜோடு பாதரட்சைகளை அணிந்திருக்கவே மாட்டானோ என்று எண்ணினேன். “அது நியாயமல்ல, வீட்டில் ஒரு ஜோடு வைத்திருக்கிறேன். இன்னொரு சூட்டும் வீட்டில் உள்ளது? எனக்கு அவைகளின் மேல் எவ்வாறு உரிமை உள்ளதோ அதே போல் அவருக்கும் உள்ளது'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். நான் எனது பாதத்தை அவருடைய பாதத்திற்கு பக்கத்தில் வைத்து அளந்து பார்த்தேன். நான் எதையும் சொல்லுவதற்கு முன்பாக எனது ஷூக்களை அவருக்கு கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரது பாதமோ மிகவும் பெரிதாக இருந்தது. அவரது தோள்களும் மிகவும் விரிந்து இருந்தது, எனவே எனது கோட்டையும் அவருக்கு கொடுக்க முடியாமல் போனது, ''தேவனே நான் அவருக்கு என்ன செய்ய முடியும்'' என்று சிந்தித்தேன். எனது வயது சென்ற தந்தை உயிரோடிருந்தால் இம் மனிதனுடைய வயதையுடையவராக இருந்திருப்பார். 21அது என்னவாயிருந்தது? உள்ளே பிரவேசிக்கையில் ...திடீரென ஏதோ ஒன்று சம்பவித்தது. அம்மனிதனுக்காக, அன்பு, பச்சாத்தாபம், ஆகியவை காணப்பட்டதை நான் என்னில் உணர்ந்தேன். அவர் திடீரென முரட்டுத்தனமாக, ஜெப மாலையை உருட்டிக் கொண்டே, ''தேவ மாதாவாகிய மரியாளே நீர் வாழ்க, ஆசீர்வதியும்...'' என்று சப்தமிட்டார். ''அது அவசியமில்லை, அதை அப்புறமாகவையும்“ என்றேன் நான். அம்மனிதர் சகோ. எஸ்பினோசாவிடம், ''எங்கே அந்தசுகமளிக்கிறவர், அவரைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன்''என்று கூறினார். ''தலைவணங்கும்படி அவருக்குக் கூறுங்கள்'' என்று நான் கூறினேன். அம்முதியவரின் பேரிலே நான் என் புயங்களை அரவணைப்பாகப் போட்டேன். நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். ''கர்த்தராகிய இயேசுவே, இவர் ஏழையான முதியவர், நான் எனது ஷூவை அவருக்குக் கொடுக்க இயலாது. அவைகளை அவர் அணிய இயலாது; நான் எனது கோட்டை அவருக்கு கொடுக்க இயலாது, ஆனால் கர்த்தராகிய தேவனே, இப்பொழுது இவருக்கு உதவத் தக்கவர் நீர் ஒருவர் மாத்திரமே. அவருக்குப் பொருந்தக்கூடிய ஒன்றைக்கொடுக்க உம்மால் இயலும். அதுதான் கண்பார்வை, அதற்காகத்தான் அவர் ஏங்கிக் கொண்டிருக்கிறார். நான் அதைசொன்ன மாத்திரத்திலே, யாரோ ஒருவர் க்ளோரியா ஏ டியோஸ்' என்று ஆர்ப்பரிக்கிறதைக் கேட்டேன் ('க்ளோரியா ஏடியோஸ்'' (லத்தீன்) என்பதற்கு 'தேவனுக்கு மகிமை'' என்று அர்த்தம் - தமிழாக்கியோன்). அம்மனிதர் எவ்வாறு என்னால் காணமுடிகிறதோ, அதைப் போலவே நன்றாகப் பார்வையடைந்தவராய், மேடையின் மேல் அங்குமிங்கும் விரைவாக ஓடிக்கொண்டிருந்தார். அடுத்த நாள் இரவிலே, அங்கே ஆடைகளின் குவியல் காணப்பட்டது; கழுத்து துண்டுகளும், முன்றானைகளும், பழைய கோட்டுகளும், பழந்துணிகளும், குல்லாய்களும் மிகவும் உயரமாகக் குவிந்து கிடந்தன. அவர்களுக்குப் பொருத்தமானதை எப்படிப் பெற்றுக் கொண்டார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்ன? அவர்கள் ஒன்றைக் கண்டுவிட்டார்கள். ஓ, ஒன்று சம்பவிக்கும் பொழுது, ஒரு காரியம் நடக்கிறது. 22அன்று காலையிலே மரியாளுக்கும் அவ்வாறே இருந்தது. அவரைக் குறித்து அவள் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று சம்பவித்திருக்க வேண்டும். அவர் அங்கே அப்பொழுது அவளுக்கு முன்பாக தோன்றினார். மரியாளுக்கு என்ன நேரிட்டதோ, அதே தான் மோசேக்கும் சம்பவித்தது. ''நீ உன் கருவிலே கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெறு வாய்“ என்று அவர் கூறினார். இப்பொழுது, அத்தூனின் செய்தியானது வேத பூர்வமானது என்று அவள் அறிந்தாள். அங்கே தோன்றிய தூதன் என்னவிதமான தூதன் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அத்தூதனின் செய்தியானது வேத பூர்வமானதாக இல்லாவிடில், அது தேவனுடைய வாக்குத்தத்தமாக இல்லாவிடில், அதைப் புறக்கணித்துவிட வேண்டும். அங்கே எல்லாவிதமான தூதர்களும் தோன்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் பல வகையான செய்திகளை யெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கர்த்தருடைய தூதனானவர் வருவாரென்றால், அவருடைய ஊழியக்காரன் தான் நான்... அந்த தூதனானவர் வருவாரென்றால், அது எவ்வளவு அதிக மாக அக்கினிஸ்தம்பம் போல் காட்சியளித்தாலும் சரி, அது எவ்வளவு அதிகமாக ஒளியாகக் காட்சியளித்தாலும் சரி, அவருடைய செய்தியானது இவ்வார்த்தையோடு இணைந்து சாட்சி கொடுக்காவிடில், நான் அதை நிராகரித்துவிடுவேன், அத்தூதன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். அது இதின்படியே இருக்க வேண்டும். ஜோசப் ஸ்மித் என்பவர் (அமெரிக்காவில் மோர்மோன் சபையை நிறுவியவர் - தமிழாக்கியோன்), தான் ஒரு தூதனைக் கண்டதாகக் கூறினார்; ஆனால் அது வார்த்தையோடு பொருந்தி சாட்சியிடவில்லை. அதற்கு முந்தின தினம் மரியாள், தான் (ஏசாயா 9:6) வாசித்த பிறகு, ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது என்று அறிந்தாள். அது நடக்கவிருக்கிறது என்று அவள் அறிந்தாள். 23அதே விதமாகத்தான், மோசேயும், தான் கற்றறிந்த வேத சாஸ்திரமெல்லாம் தன்னை நம்பிக்கையிழக்கப் பண்ணின அந்த வேளையிலே யெத்ரோவின் ஆடுகளை பாலைவனத்தின் பின்புறத்திலே மேய்த்துக் கொண்டிருக்கையிலே, ஒரு நாளிலே, அவன் ஒரு அக்கினி மயமான கோளத்தை ஒரு முட்புதரிலே பற்றியிருக்கக் கண்டான். அவனுக்கு கூறப்பட்ட வண்ணமாக அவன் தனது பாதரட்சைகளைக் கழற்றிவிட்டு வந்து, அங்கே என்ன கூறப்படுகிறது என்பதை செவிகொடுக்க வந்தான். ஆனால் அவன் அத்தூதன் வேதவாக்கியங்களின்படியே வந்தார்; என் பதைக் கண்ணுற்றபோது ... அவர் கூறினார், ''என் ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன், நான் எனது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தேன்'' என்று. தேவன் தான் அவ்வாக்குத்தத்தத்தை செய்தார் என்றும், அவனோடு கூடப் போகப்போவது அத்தூதனானவர் என்றும் அறிந்துகொண்டான்.“நான் எனது வாக்குத்தத்தத்தையும் எனது உடன்படிக்கையையும் நினைவு கூர்ந்தேன். நான் எனது ஜனங்களின் துன்பங்களைக்கண்டு, அவர்களை விடுவிக்க நான் இறங்கி வந்தேன்'' என்று கூறினார். 'நான்அவர்களை விடுதலையாக்க... இறங்கினேன்'' (யாத்திராகமம்3:8) என்று அவர் கூறினபடியால், இனிமேல் அவ்வேலை தானே செய்யப் போகிற ஒன்றல்ல என்பதை மோசேஅறிந்து கொண்டான். ஓ அதுதான் அந்த நல்ல பாகம். நான் இறங்கி வந்தேன்' என்பது. நீ என்னுடைய வாயாக இரு என்றார். ஆகவே அவன் அதுவேதபூர்வமானதாக இருக்கக் கண்டான். மரியாள், அது முற்றிலுமாக வேதபூர்வமானதாக இருக்கக் கண் டாள், ஏனெனில் அதற்கு முந்தின தினம் தான் அவள் அதைப் பற்றிவாசித்துக் கொண்டிருந்தாள்; ஒருவேளைதோற்சுருளிலே. இப்படியாக நமது சிறிய இந்த நிகழ்ச்சிகளின் கோவையானது போகிறது. இப்பொழுது, தினந்தோறும் தேவனுடைய வார்த்தையைவாசிப்பது நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்.''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே' என்று இயேசு கூறினார் (யோவான் 5:39). அதெப்படியென்றால், ''என்பிதாவின் பிரியைகளை நான் செய்யாதிருந்தால், (அவர்வருகையில் அது செய்யப்பட வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது). நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டிய தில்லை. செய்தேனேயானால் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும் ... அந்தக்கிரியைகளை விசுவாசியுங்கள்' ஏனெனில்அவைகள் தேவனால் அனுப்பப்பட்டவைகளாகும் என்றார் (யோவான் 10:37, 38). 24இந்நாளிலே நாம் பரலோகத்திலிருந்து இங்கு விஜயம் செய்பவரை எதிர்நோக்கிக் கொண்டிருக் கிறோம். அது ஒரு தேவனுடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது. சபையே, உங்களுடைய ஆழமான ஆவிக்குரிய சிந்தையை விரைந்து அணிந்து கொள்ளுங்கள், நாம் இப்பொழுது ஒருவர் விஜயம் செய்வதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அநேகர் தாங்கள் தான் அவர் என்று சொல்லிக் கொள்ளுகின்றனர். இந்த பரலோக வருகையாளரை நாம் கண்டு கொள்ளக்கூடும் ஒரே வழி என்னவெனில், அவர் வார்த்தையோடு சரியாக பொருந்தினவராக இருப்பார். அவள் அத்தூதனின் செயலைக் கண்டபோது, அத்தூதன் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று கண்டு கொண்டாள். அவரை நோக்கிப் - பார்த்தாள். அது ஒரு தூதனாகத்தான் இருக்கவேண்டும். 'நான் தேவனுடைய வலது பாரிசத்திலே நிற்கும் காபிரியேல் என்று கூறினான். இப்பொழுது, தேவன் ஒரு காரியத்தைச் செய்ய ஆயத்தமாகையில், அவர் எப்பொழுதும் ஒரு தூதனை அனுப்புகிறார். எப்போதும் அவ்வாறே செய்திருக்கிறார். அவ்வாறே இனிமேலும் செய்வார். காபிரியேல் கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தல் செய்தான். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் காபிரியேல் அறிவிப்பான். அது சரிதான். ஏதோ மகத்தான ஒன்று சம்பவிக்கப் போகிறது. இத்தூதனை நாம் கவனிக்கையில், அவன், மரியாளே வாழ்க'' என்று கூறிவிட்டு, அவளிடம் என்ன சம்பவிக்கப்போகிறது என்றும் கூறியபோது, அவள் அவனை சந்தேகிக்கவில்லை; ஏனெனில், அத்தூதன் வேதவாக்கியங்களின்படியே பரிபூரணமாக சரியாக இருந்தான் என்றும், அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அறிந்திருந்தாள். 25இப்பொழுதும், நாம் இக்கடைசி நாட்களிலே, ஒரு தூதன் வருவதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், இயேசு அவ்வாறிருக்கும் என்று கூறினார். ஏனெனில் தீர்க்கதரிசிகள் அவ்வாறே இருக்கும் என்று கூறியுள்ளனர். மல்கியாவும் அவ்வாறே நடக்கும் என்று கூறியுள்ளான். அனைத்து தீர்க்கதரிசிகளும் சாட்சியிட்டுள்ளனர். இயேசுவானவர்,சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்னர் கூட, தான் மரித்துப்போவதைக் குறித்து கூறியதைவிட, மேலதிகமாக, தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தே பேசினார். இவைகளெல்லாம் சம்பாவிக்கத் தொடங்குவதை நாம் காண்கையில், நாம் வேதவாக்கியங்களை ஆராயப்போவது நமக்கு நலமாயிருக்கும். ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மத்தேயு 24:24) என்று அவர் கூறினார். பில்லி கிராம் அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர், ஒரு செய்தியிலே, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறினார். அச்சுவிசேஷகரோடு கருத்து வேறுபட்டுள்ளேன். அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க இயலாது; ஏனெனில், அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாவார்கள். 26மனுஷகுமாரன் வருவதற்கு சற்று முன்னால் உள்ள நாட்கள் சோதோமின் நாட்களுக்கு ஒப்பாக இருக்கும் என்று இயேசு கூறினார். இவ்வாரத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல, அங்கே மூன்று வகையான மக்களுக்காக, சோதோமுக்கு ஒரு தூதன் வந்தான்; மூன்று தூதர்கள் வந்தார்கள். ஒரு சாரார், சோதோமியர்கள், இரண்டாமவர் வெதுவெதுப்பான சபை, மூன்றாவதானவர்கள், வெளியே பிரித்து அழைக்கப்பட்ட சபையாகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஆபிரகாமும் அவனது குழுவினரும், லோத்தும் அவனது குழுவினரும், சோதோமும் அவர்களது குழுவினரும் - இருவர் அங்கே சென்றனர். அச்சுவிசேஷகர் சோதோமுக்குள் பிரசங்கிக்கச் சென்றார்; விசுவாசிகளாகிய அம் மக்களை வெளியே கொண்டு வருவதற்காக அங்கே சென்றார். அவர்களில் சிலரை வெளியே கொண்டு வந்தார். 27ஆனால், தெரிந்துகொள்ளப்பட்ட சபையோடு பிந்தி தனித்திருந்த அந்த ஒருவரோ, ஒரு அடையாளத்தைக் காண்பித்தார் என்று நாம் காண்கிறோம். தேவன் தாமே அதைச் செய்தார். அது ஒரு புராணக் கதையல்ல. அது ஒரு நிழலான சரீரமல்ல, அப்படிப்பட்ட ஒரு நிழல் சரீரத்தால் புசிக்க இயலாது. அவரோ, கன்றுக்குட்டியின் மாமிசத்தைப் புசித்து, வெண்ணையோடு கூடிய அப்பத்தையும் புசித்தார். பசுவின் பாலையும் குடித்தார். ஒரு நிழல் சரீரமானது புசிக்காது, குடிக்காது. அது தேவன் மாம்சத்திலே பிரத்தியட்சமானதாகும். நிச்சயமாக அது அப்படித்தான் இருந்தது. அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார்? “... அந்த நாளிலே இருந்தது போலவே இருக்கும்...'' என்று இயேசுகூறினார். தேவன், தாம் கிரயத்துக் கொண்டு பரிசுத்தமாக்கிய தம்முடைய ஜனங்களுடைய மாமிசத்திற்குள்ளே, மீண்டும் வருவார். தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு முன்பு அவர் காண்பித்த அதே அடையாளத்தை இப்போது தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கும் காண்பிப்பார். 28'அதை விட்டுவெளியே வாருங்கள்'' என்ற பிரசங்கம் இல்லை. இது, அது என்பதெல்லாம் ஒன்றுமில்லை அங்கே. ஆபிரகாம் ஏற்கனவே அதைவிட்டு வெளியே தான் இருக்கிறான். ஆனால் ஏனைய தூதர்களோ, வெளியே வாருங்கள், வெளியே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டி ருக்கிறார்கள். சபையானது, சபை என்ற வார்த்தைக்கே 'பிரித்தெடுக்கப்பட்டவர்கள்'' என்பது பொருளாகும். தேவனுடைய சபையானது ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது. அது பிரித்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது. அவர் அவனுக்கு நான் தான் அவர் என்று கூறும் அடையாளத்தைக் கொடுத்தார். அவர் அதைச் செய்த பொழுது, தனது முதுகுப் பக்கமாக இருந்த சாராள் நகைத்ததைக் கூறினார், அதே வல்லமையால், இயேசுவானவர் தம்முடைய வருகையில், சமாரியர், யூதர் ஆகிய இருசாரா ருக்குமே, அதே அடையாளத்தைச் செய்து காண்பித்தார். இக்கடைசி நாட்களிலே அவர் தம்முடைய தூதனை அனுப்புவார் என்பதாக முன்னு ரைக்கப்பட்டுள்ளது. அத்தூதனானவர் இன்றிரவிலே ஒரு மனிதனல்ல. இல்லை ஐயா, அவர் பரிசுத்த ஆவியானவர். அவர்தான் அவருடைய தூதன். அதெப்படியென்றால், தேவன் தம்முடைய வருகைக்கு சற்று முன்னதாக, தம்முடைய சபையிலே அசைவாடி, அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். 29இப்பொழுது, இத்தூதன் நிச்சயமாகவே, வேத வாக்கியங்களின்படி உள்ளவனாக இருத்தல் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல், கள்ளத்தீர்க்கதரிசிகளைப் பற்றியும் நாம் தேவனால் எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொண்டால், அவன் கூறுவது நிறைவேறாமற்போனால், அவனுக்குப் பயப்படவேண்டாம். நான் அவனோடு இல்லை; ஆனால் அவர் கூறுவது நிறைவேறினால், நான் அத்தீர்க்கதரிசியோடு இருக்கிறேன், அவனுக்கு செவிகொடுங்கள் என்று வேதம் கூறுகிறது. அது உண்மையாக இருக்கிறது (உபாகமம் 18:22). ஆகவே, நாம் இன்றைக்குக் காண்பதென்னவென்றால், அச்செய்தியானது உண்மையான வேதாகம செய்தியாயுள்ளது. அதுபரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு திருப்புவதாயுள்ளது; தேவனுடைய வல்லமைக்கு திரும்பிச் செல்லுதல், மீண்டும் பெந்தேகோஸ்தேக்கு திரும்பிச் செல்லுதல், பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கு திருப்புதல், அல்லது பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடத்திற்கு திருப்புதல் என்பதாக இக்கடைசி நாட்களிலே இருக்கிறது. நாம் அந்த பரலோக செய்தியாளருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம்; அவர் இன்றிரவிலே இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அவர் என்னசெய்கிறார்? அவர் சாட்சியிடுகிறார். 30இப்பொழுது செவிகொடுங்கள், சிநேகிதரே, ஒரு பதிலாளை, பகரப்போலியை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வெறுமனே, ஒரு மனிதனுடைய கையை குலுக்கிக்கொண்டு, பதிவேட்டில் உங்கள் பெயரை பதிந்துகொள்ளுதல் வேண்டாம். அதைப் பொருத்த மட்டில் சரியாக இருக்கலாம். பழமைப் பாணி யிலிருந்து விடுபட்டு, பண்பார்ந்த ஸ்தலத்தில் சென்று, சரியாக வாழ முயற்சிப்பது உதவுவதாக அது இருக்கலாம். ஆனால் அது போதுமானதல்ல. '... ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமட்டான் ...'' (யோவான் 3:3) இப்பொழுது; காணுதல் என்றால் அறிந்து கொண்டு புரிந்துகொள்ளல் என்று அர்த்தமாம். தாங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் ஏராளமான மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தேவனுடைய செய்தியை புரிந்து கொள்ள முடியவில்லை, கர்த்தருடைய தூதனைக் காண முடியவில்லை. அவர்களுடைய கண்கள் குருடாகியிருக்கின்றன. சகோரனே, பரிசுத்த ஆவியினால் ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், வார்த்தையை எழுதிய அதே பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தையை உறுதிப்படுத்து வார். உங்களிலுள்ள பரிசுத்த ஆவியின் உறுதிப் பாட்டோடு . நான் கூறியதைப் புரிந்து கொண்டீர்களா? அது தன்னைப்பற்றியே சாட்சிகொடுக்கும். அப்போது, நம்முடைய ஆவி அவருடைய ஆவியோடு கூட சேர்ந்து சாட்சியிடும். ஏனெனில், அவருடைய ஆவியா னது, அவருடைய வார்த்தையோடு சேர்ந்து சாட்சியிடுகிறது .... தேவனுடைய வார்த்தையானது ஜீவனும், வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும், கருக்கானதாயும், கணுக் களையும், ஊனையும் உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' (எபி ரேயர் 4:12). அது “கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்” என்பதாக இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தை அவ்வாறு இருக்கிறது. சரியாக அப்படித்தான் உள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார். தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட சபையில் தோன்றிக்கொண்டிருக்கிறார். 31ஓ, நம்மிடையே மகத்தான எழுப்புதல்கள் தேசங்கள் எங்கிலும் தீவிரமாய்ப் பரவி, மக்களை சோதோமைவிட்டு வெளியே வரும்படி அழைத்தல் உண்டாகியிருக்கிறது. ஆனால், தெரிந்து கொள்ளப்பட்ட சபையிலோ, நமக்கு, தேவன் தாமே இருக்கப்பெற்றிருக்கிறோம்; முன்பு அங்கே காணப்பட்ட அதே தேவன் தாமே. அங்கே ஒரேயொருவர் மாத்திரமே உள்ளார். அந்த ஒரேயொருவர் தாமே தம்முடைய சபையிலே தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாத, வேத பூர்வமான உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவாக பிரத்தியட்சப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வேத வாக்கியங்களின்படி இருக்காவிடில், வேதவாக்கிய ங்களைசாட்சியிடாவிட்டால், தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தாவிடில், அப்போது நான் அவரை விசுவாசிக்கமாட்டேன். ஆனால் அவர் அவ்வாறு செய்கிறபடியால், அப்போது அவர் தேவனிடத்தினின்று வந்தவர் என்று அறிவேன், மரியாள் செய்ததைப் போலவே, ஆமென், மோசே செய்தது போலவே, ஏனையோர்செய்ததைப் போலவே. அது வேதவாக்கியங்களின்படியில்லாவிடில் .... 32இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிவகைகள் உண்மையைக் கண்டறிய இருந்தன. ஒரு மனிதன் ஒரு சொப்பனத்தைக் கண்டாலோ, அல்லது ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தாலோ, அதைக் குறித்து அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு கம்பத்தின்மேல் தொங்கின ஊரீம் தும்மீம் முன்பாக அவர்களைக் கொண்டு செல்வர். ஊரீம் தும்மீமிலே ஆரோனின் மார்ப்பதக்கத்தில் பனிரெண்டு பிறப்பின் கற்கள் கொண்டதாக விளங்கியதே ஊரீம் தும்மீம் ஆகும். அவர்கள் ஒவ்வொருவருடைய பிறப்பின் கற்களைக் கொண்டதாக அம்மார்ப்பதக்கம் விளங்கியது. அதை அவர்கள் ஒரு கம்பத்தின் மேல் தொங்கவிட்டார்கள். தீர்க்கதரிசியானவன், அதன் முன்பாக நின்று தீர்க்கதரிசனம் உரைத்தால், அதுஎவ்வளவு உண்மையாக தோற்றமளித்தாலும் சரி, இயற்கைக்கு மேம்பட்ட அது பதிலளிக்கவில்லையெனில், வானவில்லின் ஏழு நிறங்கள் ஒன்று சேர்ந்து ஒளிர்ந்தால் ஒழிய அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்தீர்க்கதரிசி என்ன கூறினாலும் சரி, அவன் தவறுதான். சொப்பனக்காரன் என்ன சொப்பனம் கண்டாலும் சரி, அவன் தவறுதான். தேவன் எப்போதும் இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில்தான் பதிலளிக்கிறார். ஆமென். இப்பொழுது ஆசாரியத்துவமும் முடிந்துபோனது; ஊரீம்தும்மீம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் தேவனுக்கு இப்பொழுது வேறொரு ஊரீம் தும்மீம் உள்ளது. இதுதான் அது. தேவனுடைய வார்த்தையே ஊரீம் தும்மீமாக இருக்கிறது. ''தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்'' என்று தேவன் கூறியுள்ளார். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று இயேசு கூறினார் (மாற்கு 13:31). ஆகவே, இப்பொழுது, ஒருவர் பேசுவது வேதவாக்கியங்களின்படி இல்லாவிடில், அதை விசுவாசிக்க வேண்டாம். அந்நபர் பேசுவது வேதவாக்கியத்தின்படி இருந்தால் ஒரு நிமிடம் பொறுங்கள். அதை ஊரீம் தும்மீமைக் கொண்டு சோதியுங்கள். அப்போது, இயற்கைக்கு மேம்பட்டது அது சத்தியமென்று அவர் பிரதியுத்தரம் கூறினால், அப்போது அதை விசுவாசியுங்கள். ஒரு உண்மையான செய்தியை விசுவாசிக்க, அதுவே வழியாயிருக்கிறது. வேதமானது ஒன்றைக் குறித்து வாக்குத்தத்தம் செய்திருந்தால், அது அவ்வாறே உள்ளது என்று வேதம் கூறினால், அதுவே தேவனுடைய ஊரீம் தும்மமாக இருக்கிறது. பிரசங்கியார், வேதாகமம் கூறியபடியே பிரசங்கித்தால், அவன் தேவனுடைய செய்தியாளனாக, தேவனுடைய சாட்சியாக இருக்கிறான். அது அவ்வாறு இருந்தால், அப்போது, அந்த வார்த்தையின் தெய்வீக வல்லமையானது பிரத்தியட்சமாகி, தேவனை நிரூபிப்பதாக அதுவே இருக்கும். தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். 33நாம் ஒருசெய்தியாளனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அச்செய்தியாளன் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். ''இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்'' '... உலகத்தின் முடிவு பரியந்தமும்...நான் உங்களுடனே கூட இருக்கிறேன்...'' ''நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினால் ... நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் இன்னும் அதிகமான கிரியைகளைச் செய்வான்'' (யோவான் 14:19; மத்தேயு 28:20; யோவான் 14:12). இப்பொழுது, இங்கே இன்னும் அதிகமான (ஆங்கிலத்தில் 'More' என்று குறிப்பிடுகிறார் சகோ.பிரான்ஹாம் - தமிழாக்கியோன்) என்றபதத்தை நான் இங்கே உபயோகிக்கிறேன், சரியான மொழி பெயர்ப்பில் ''இன்னும் அதிகமான'' என்ற வார்த்தையே (ஆங்கிலத்தில் 'More' என்ற வார்த்தை - தமிழாக்கியோன்) கொடுக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பின்படி உள்ள வேதாகமத்தில், ''இதைவிட பெரிய'' என்று சொல்லப்பட்டுள்ளது. (ஆங்கிலத்தில் Greater' என்ற வார்த்தை - தமிழாக்கியோன்) அவரைவிட பெரிய கிரியைகளை யார் இனிசெய்ய முடியும்? அவர் மரித்தோரை எழுப்பினார், இயற்கையை அடக்கினார் இன்னும் எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அப்போது அவர் ஒரு நபரில் இருந்தார். தேவத்துவம் யாவும், இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதனிலே வாசம் செய்தது. ஆனால் இக்காலத்தில், அவர் சர்வலோகத்திலும் அவரது சபைக்குள்ளாக இருந்து கொண்டு, அவர் செய்த அதே விதமான கிரியைகளை இன்னும் மேலதிகமாக செய்கிறார். '... நான் செய்த கிரியைகளை தானும் செய்வான். இதைவிட மேலதிகமாகவும் கிரியைகளைச் செய்வான்; ஏனெனில் நான் இப்பூமியில் மாம்சத்தில் வந்துவாசம் செய்வதற்கு முன்பாக அக்கினி ஸ்தம்பத்தில் இருந்து வந்தேனே; அங்கே திரும்பிச் செல்லுகிறேன். அதே கிரியைகளினாலும், அதே பிரத்தியட்சமாக்குதலி னாலும் நான் என்னை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தேனே என்று கூறினார். அது மிகவும் சரியாக இருக்கிறது. நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்கு திரும்பிச் செல்லுகிறேன் என்று இயேசு கூறினார். அது சரிதானே? அது சரிதான். அவர் தேவனாக இருந்தாரெனில்... 34ஒரு நாளிலே அவர் அங்கே பேசினார்; அவர்கள் அவரோடு பேசுகையில், அவர் இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லையே அப்படியிருந்தும், ஆபிரகாமை கண்டதாகக் கூறுகிறாரே என்று கேட்டார்கள். ''... ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்...''(யோவான் 8:58) என்று அவர் கூறினார். மோசேயுடனே முட்செடியின்லிருந்து பேசியவர் தான் இருக்கிறேன்'' என்பவர். அவரே வேதவாக்கியங்களின்படியான அக்கினி ஸ்தம்பமானவர் ஆவார். அவரே 'நான் இருக்கிறேன்'' என்பவராக இருக்கிறார். 'நான் இருந்தேன்'' என்பதாக அல்ல. அல்லது 'நான் இருப்பேன்' என்பதாக அல்ல “நான் இருக்கிறேன்” என்றே உள்ளது. எப்போதும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். “இருக்கிறேன்'' என்பவர் தம்முடைய சொந்தக் குமாரனுடைய சரீரத்தில் நம்மத்தியில் சமுகமளித்த போது, தம்முடைய சரீரத்தை அவரே சிருஷ்டித்துக் கொண்டார் என்று நாம் காண்கிறோம். தேவன் என்ற நிலையிலிருந்து மானிடனாக ஆவதற்காக தன் உருவத்தை அவர் மாற்றிக்கொண்டார். நம்மை இரட்சிப்புக்கு திரும்பகொண்டு வந்து மீண்டும் ஏதேன் தோட்டத்திற்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு செய்தார். அவர் தன் நிலையிலிருந்து தாண்டிக் கடந்து வந்து, தமது கூடாரத்தை நம் மத்தியில் விரித்து, நம்மைப் போல் புசித்தார். நம்மைப் போல் உறங்கினார், நம்மைப் போல் நடந்தார், நம்மைப்போல் தோற்றமளித்தார். அவர் நம்மைப் போல் ஆனார், அவர் மூலமாக நாம் அவரைப்போல ஆவதற்காகவும், இராஜ்யத்தில் அவரோடு உடன்சுதந்தரவாளிகளாக ஆவதற்காகவும் அவர் நம்மைப் போல் ஆனார். 35அவரோடு கூட அக்கினி ஸ்தம்பம் இருந்தபோது, அதை நாம் கண்டோம், அதுதானே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தது. “நான் இந்த கிரியைகளைச் செய்யவில்லை; என்னில் வாசமாயிருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளை செய்கிறார். ”... பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதாவானவர் காண்பிக்கிறதெதுவோ அதையே குமாரனும் செய்கிறார் (யோவான் 5:19). “... என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்'' என்றார் (யோவான் 5:17). ஆமென். சரி. அவர் மரித்து, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். அதற்கு சில நாட்கள் கழித்து, வளைந்த மூக்குடைய சிக்கலான ஆளாக இருந்த ஒரு யூதன், தன்பாக்கெட்டிலே சிலவற்றை வைத்துக் கொண்டு, ''இந்த வழியாக“ உள்ள சபையினர் யாவரையும் துன்புறுத்துவதற்காக போய்க் கொண்டிருந்தான். தமஸ்குவுக்குப் போகும் வழியில் போய்க்கொண்டிருக்கையில், அவன் அடித்து கீழே தள்ளப்பட்டான். அவன் ஏறெடுத்துப்பார்த்தபோது, அங்கே அவன் ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்பமானது தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டான். ''சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்'' என்று கூறியதையும் கேட்டான் (அப். 9:4). '... ஆண்டவரே நீர் யார் என்றான்...'' (அப். 9:5). யார் இந்த அக்கினி ஸ்தம்பம்? ''... நான் தேவனிடத்தினின்று வந்தேன், தேவனிடத்திற்கு திரும்பிச் செல்லுகிறேன்...' '... இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.'' (அப். 9:5). 36தீர்க்கதரிசி கூறினதென்னவென்றால், அங்கே முன்மாரியும், பின்மாரியும் உண்டாயிருக்கும் என்று. பின்மாரியிலே, முன்மாரி, பின்மாரி இரண்டும் சேர்ந்தே ஏற்படும். சர்வலோகத்திலும் உள்ள ஒரு மகத்தான சபையானது உலகத்தின் ஒருமுனையிலி ருந்து உலகின் மறுமுனை வரைக்கிலும் வந்து தீவிரமாகப் பரவும். ஒரு மகத்தான செய்தி, மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் இந்த சபையால் செய்து நிறைவேற்றப்படும். அந்நாளிலே தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, மகத்தான செயல்களைச் செய்வார்கள் என்று தானியேல் கூறினான். (தமிழ் வேதாகமத்தில் அதற்கேற்றபடி செய்வார்கள் என்று (தானியேல் 11:32) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ளபடி பார்த்தால், ''அருஞ்செயல்களைச் செய்வார்கள்' அல்லது மகத்தான செயல்களைச் செய்வார்கள்'' என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) சரியாக இந்நாளிலே அப்படிப்பட்ட நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிழற்படக் கருவி இயந்திரக் கண்ணானது நம் மேல் உள்ள அக்கினி ஸ்தம்பத்தை தத்ரூபமாகப் படம் பிடித்துக்காட்டுகிறது, இதே அக்கினி ஸ்தம்பம்தான் இஸ்ரவேல்புத்திரரை வழிநடத்திச் சென்றது. ஆனால் அது அதே காரியங்களைச் செய்தது; அதை நீங்கள் எப்படி சந்தேகிக்கலாம்? அது வேத வாக்கியங்களின் படியாகவே உள்ளது. 37“மரியாளே வாழ்க, ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள், தேவனுடய பார்வையிலே நீ கிருபை பெற்றாய்'', ”ஓ, சபையே நீ வாழ்க, ஜனங்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீயே; ஏனெனில் நீ தேவனுடைய பார்வையில் கிருபை பெற்றாய்; நீ நித்திய ஜீவனுக்காக விசுவாசித்திருக் கிறாய்; தேவன் உனக்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்திருக்கிறார். அது சரியே. இந்த செய்தியாளர், ஒரு உண்மையான, தேவ செய்தியாளனாக இருப்பார்; பரிசுத்த ஆவியானவரே தேவனுடைய செய்தியாயிருக்கிறது. கவனியுங்கள்; மரியாள் அது வேதவாக்கியங்களின்படியாக உள்ளது என்பதை கண்டுகொண்டவுடன்,“நான் டாக்டர் ஜோன்ஸ் அவர்களிடம் போய் இது சரியா, தவறா என்று கேட்டறிந்து வருவேன் என்று கூறவில்லை. ரபீகபின்ஸ்கியிடம் அது சரியா தவறா என்று கேட்டறியப் போகவில்லை. அப்படிப்பட்டவைகளோடு அவளுக்கு ஒன்றும் இல்லை. அவள் என்ன கூறினாள் என்பது உங்களுக்குத் தெரியுமா?''... இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது...'' என்று அவள் கூறினாள். ஏனெனில், அந்த வார்த்தையானது தேவனுடைய வார்த்தை என்றும், அச்செய்தியாளன் தேவனுடைய செய்தியாளன் என்றும், அத்தூதன் தேவனுடைய தூதன் என்றும் அவள் அறிந்திருந்தாள்; ஏனெனில் அச்செய்தி, தேவனுடைய வார்த்தையோடு நிலைத்திருந்தது. ஆமென். '... இதோ நான் ஆண்டவருக்கு அடிமை...'' ''... இது எப்படியாகும்...''என்றாள். (லூக்கா 1:34, 38). ''..... பரிசுத்த ஆவி உன்மேல் வரும்...... ஆதலால் உன்னிடத்தில். பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்'' என்று கூறினான் (லூக்கா 1:35). ''இதோ நான், அது எவ்வாறு சம்பவிக்கும் என்பது எனக்குத் தெரியாது. அது எப்படியாகும் என்பது ஒரு பொருட்டல்ல, அவ்வாறு நடக்கும் என்று நீர் கூறினீர், அது வேதவாக்கியங்களின்படி இருக்கிறது, நான் அதை விசுவாசிக்கிறேன், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்'' என்று அவள் கூறினாள். ஜீவன் தன்னில் உற்பத்தியாவதை அவள் உணருமுன்னரே அதன் அடையாளம் எதுவும் உணருமுன்னரே, அவள் தேவனை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினாள். அவளுக்கு இனிமேல் எந்தவித அடையாளங்களும் தேவைப்படவில்லை. அவருடைய வார்த்தையை அவள் பெற்றிருந்தாள், அதுவே எல்லாவற்றிலும் அவசியமாயுள்ளது. ஆமென். நான் அதை விரும்புகிறேன். 38மோசே தேவனைப்பற்றிக் கொண்டவுடனே, அது வேதவாக்கியங்களின்படியே உள்ளது என்று கண்டு கொண்டவுடனே, அதோ அவன் எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றான். மரியாள் பற்றிக்கொண்டவுடனே... அத்தூதன் அவளைப் புரிந்துகொள்ள வைத்தான்; அதாவது அவள் அவனைக் கண்டு, அது தேவன் தாமே என்று அறிந்து, அது வேதவாக்கியங்களின்படியுள்ளது என்று கண்டு கொண்டாள். அதனால் அவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, எங்கும் சென்று, தான் பெற்ற மேலான காரியத்தின் எந்தவொரு அத்தாட்சியும் இல்லாதிருந்தும் அதைப்பற்றி அவள் சாட்சி கூறினாள். மற்றுமொரு காரியம் என்னவெனில், இதற்கு முன்பு சம்பவித்திராத ஒன்றினைப்பற்றி அவள் சாட்சி கூறினாள். ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. இதுவரையிலும் சம்பவித்திராத ஒன்றினைப் பற்றி அவள் சாட்சி கூறினாள். இதுவரையிலும் ஒரு கன்னிகை கர்ப்பவதியானதில்லை. ஆனால் அவளுக்கோ தூதனுடைய வார்த்தை வந்தது. அத்தூதன் வேதவாக்கியங்களின்படியே இருந்தான். ஆகவே, வாக்குத்தத்தம் செய்யப்பட்டதின்படியே உள்ளது என்று அறிந்துகொண்டாள். அத்தூதன் கர்த்தருடைய வார்த்தையை பெற்றிருந்தான்; அது வாக்குரைக்கப்பட்டதாகும். அவள் தான் சிறுமையும் எளிமையுமானவளாக இருந்த போதிலும் தேவன் தன்னைத் தெரிந்து கொண்டார் என்று அவள் எண்ணினபடியால், அவள் மிகவும் சந்தோஷமுள்ளவளாய்க் காணப்பட்டாள். அவள் தான் பெற்ற செய்தியோடு எங்கும் சென்று, அவள் தான் ஒரு குழந்தையை பெற்றெடுப்போம் என்பதற்குரிய முதல் அடையாளத்தை பெற்றுக்கொள்ளும் முன்னரே, யாவருக்கும்தான் ஒரு குழந்தையைப் பெறப்போவதாக சாட்சி கூறினாள். நான் எதையாவது உணருகிறேனா இல்லையோ என்பதை அறியுமளவும் சற்றுப்பொறுத்துக் கொள்ளுங்கள் என்று காத்திருந்து அவள் கூறவில்லை. இல்லை, இல்லை. ஓ, தேவனே, எங்களுக்கு இன்னும் அதிகமான மரியாள்களைத் தாரும். 39தேவனை அவருடைய வார்த்தையின் பேரில் விசுவாசித்து, எதுவும் சம்பவிக்கிறதற்கு முன்பே, வார்த்தையின் பேரில் களிகூர ஆரம்பிக்கும் மரியாள்கள், பீமோண்ட் இன்னும் உலகின் ஏனைய பாகங்களுக்கும் தேவையாயிருக்கிறது. கர்த்தரின் சமூகம் மிகவும் அருகாமையில் இருக்கிற வேளையில், சக்கர நாற்காலிகளில் இருக்கும் ஸ்திரீகளே, இதயநோயோடு அவதிப்படும் சகோதர, சகோதரிகளே, உங்களைப்பற்றி என்ன? வியாதிகள் மற்றும் யாவற்றையும் குறித்து என்ன? என்னே! என்னே! அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்களாக. கர்த்தர் அதை வாக்குத்தத்தம் செய்தார். ''சகோ.பிரான் ஹாமே நீங்கள் வந்து என்மேல் கைகளை வைப்பீர்களென்றால் ...'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதினால் ஒன்றும் இல்லை. நீங்கள் ஏற்கனவே சுகமாகி விட்டீர்கள். எனெனில், நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்க ளினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; (ஏசாயா 53:5). “'... அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்'' (1பேதுரு 2:24). அது கடந்த காலத்தில் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. ஆகவே அதை ஏற்றுக்கொண்டு, களிகூர ஆரம்பியுங்கள். ''கர்த்தாவே, உமக்கு நன்றி, இப்பொழுது நான் அதைக் காண்கிறேன். தேவனுக்கு துதியுண்டாவதாக. நான் குணமானேன். யார் என்னசொன்னாலும், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன், அல்லது நான் எவ்வாறு உணருகிறேன் என்பதையும் பொருட்படுத்தமாட்டேன். எப்படியும் நான் குணமானேன்'' என்று கூறுங்கள். அப்படித்தான் செய்ய வேண்டும். 40அத்தூதனுடைய செய்தியானது. அது எப்போதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அவ்விதமாக இருக்கும்படிதான் தேவன் விரும்புகிறார். அது என்ன செய்தது. தேவனை அவருடைய வார்த்தையின் பேரில் விசுவாசித்தலினால், அவளுடைய இயற்கையான ஜீவனின் போக்கையே அவளுக்கு அது முழுவதும் மாற்றமடையச் செய்தது. அதே காரியத்தையே உங்களுக்கும் அது செய்யும். அது நிச்சயமாக அவ்வாறு செய்யும். பாவியே, அது உன்னை எடுத்து கழுவி, பனியைப்போல் வெண்மையாக்கும். குறை கூறுபவரே! உம்மை அது எடுத்து, எங்களில் ஒருவரைப் போல் ஆக்கும். நிச்சயமாக அது அவ்வாறு செய்யும். வியாதிப்பட்டவரே உம்மை அது எடுத்து ஆரோக்கியமடையச் செய்யும். நரகத்தை நோக்கிச் செல்லுபவரே! உம்மை அது எடுத்து, உம்மை முற்றிலும் மாற்றி, பரலோகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்படி செய்யும். அவரை அவருடைய வார்த்தையின் பேரில் பற்றிக்கொண்டு, அதை விசுவாசித்து, களிகூர ஆரம்பியுங்கள். கர்த்தருடைய தூதனானவர் - (செய்தியாளன்) ஆக இருக்கும் பரிசுத்த ஆவியானவர், இங்கே இருந்து கொண்டு, ஜனங்கள் மேல் சுற்றிலும் அசைவாடி, அவர்களை அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார். நீர் ஒரு அந்நியராக இருப்பீரானால், இம்மக்களோடு உள்ள காரியம் என்ன என்று அறிய நீர் விரும்பினால், யோவேல் முன்னுரைத்தபடி அது தான் காரிய மாயிருக்கிறது. பெந்தேகோஸ்தே என்னும் நாளிலே, பேதுரு, “இதுதான் அது'' என்றான். (யோவேல் 2:28, 29) (அப். 2:16). அதனோடு ஒன்றை சேர்த்து நான் கூற விரும்புகிறேன். இதுதான் அது என்றில்லாவிட்டால், இப்பொழுது பெற்றுள்ள ''இதையே'', ''அது'' வருகிறவரையிலும் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், ''இதனோடு” எனக்கு மிகவும் பயபக்திக்குரிய விதமான நல்ல வேளையானது உண்டாயிருக்கிறது. (இதுதான் அது என்று சொல்லப்படுவது, யோவேலினால் (யோவேல் 2:28, 29) உரைக்கப்பட்டது தான் இப்பொழுது வந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே, இதுதான் அது என்று கூறுகிறார், சகோ, பிரான்ஹாம் அவர்கள் - தமிழாக்கியோன்). அந்நாளிலே உண்டாயிருந்த அதுவே தான் இப்பொழுது வந்திருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 41மரியாள் காத்திருக்கவில்லை. குறை கூறுவோரைக் குறித்து அவள் கவலை கொள்ளவில்லை. யார் என்னசொன்ன போதிலும் அவள் அக்கறை கொள்ளவில்லை. அவள் ஒரு தூதனைச் சந்தித்திருக்கிறாள். அவள் அவனுடைய சத்தத்தை பார்த்திருக்கிறாள்.... அல்லது அவனது சமூகத்தை அவள் கண்டிருக்கிறாள். அவன் அவளிடம் சத்தியத்தையே உரைத்திருக்கிறான் என்று அறிந்திருந்தாள். ஏனெனில், அது வேதவாக்கியத் தின்படியே இருந்தது. ஒரு ஆசீர்வாதத்தை அவளுக்கு அது வாக்குரைத்திருந்தது, அவள் அதை அப்படியே விசுவாசித்துக் கொண்டே சென்றாள். அது சம்பவிக்கத்தான் போகிறது என்று அவள் அறிந்திருந்தாள். ஓ, அதைப்பற்றி இன்னொரு காரியம் உள்ளது, என்னவெனில், நீங்கள் அப்படிப்பட்டதான ஒன்றை சந்திக்க நேரிடும்போது, அதைப்பற்றி உங்களால் அமரிக்கையாயிருக்க இயலாது. தூதன் அவளிடம், அவளுடைய உறவினளாகிய எலிசபெத்தை பற்றி கூறினான்; அவள் யூதேயாவிலுள்ள மலைத்தேசமொன்றில் வாசம் செய்து வந்தாள். அவள் வயது சென்றவளும், சுமார் எழுபது வயது மதிக்கத்தக்கவளாய் இருந்தாள். அவளும் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனை பெறப் போகிறவளாய் இருந்தாள். அவள் ஏற்கனவே ஆறுமாத கர்ப்பிணியாய், தாயாகப் போகிறவளாய் இருந்தாள். வாஸ்தவமாகவே, அச்சிறு குழந்தையாகிய யோவான், இன்னும் கர்ப்பத்தில் உயிரோடிருப்பதாகக் காணப்படவில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலையடைந்திருந்தனர். ஆகவே, நாம் காண்பதென்னவெனில் எலிசபெத்...சகரியா தான் அவளுடைய கணவன்; அவன் ஒருஆசாரியனா யிருந்தான். இது சம்பவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவன் ஆலயத்தில் இருந்தான். உங்களுக்குத் தெரியுமா, தேவன் தாழ்மையுள்ள மக்கள் மத்தியில் காரியங்கள் ஒன்று சேர்ந்து நடக்கும்படி செய்கிறார். 42சகரியாவைப் பாருங்கள். இப்பொழுது, காபிரியேல் தூதன் அவனிடத்தில் வந்தான். அவன் பெயருக்கு தூபங்காட்டுவதற்காக சீட்டு விழுந்தமையால், அவன் தேவாலயத்தில் பீடத்தண்டையில் ஊழியஞ்செய்து கொண்டு நின்றிருந்தான். அவன் தூபபீடத்தின் வலது புறமாக திரும்பிப் பார்க்க நேரிட்டது. நான் எப்பொழுதும் ஜனங்களை இந்தப் பக்கமாக ஏன் கொண்டு வருகிறேனென்று நீங்கள் வியக்கக்கூடும். அங்கே தான் அவர் நின்று கொண்டிருக்கிறார். ஆகவே, பீடத்தின் வலதுபுறமாக ஒரு தூதன் நின்று கொண்டிருந்தான். அவன் சகரியாவிடம், அவன் தன் ஊழிய நாட்கள் நிறைவேறின பின்பு, தன் வீட்டுக்குத் திரும்பிப் போய், தன் மனைவியோடு இருக்கையில், அவள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள் என்று கூறினான். அப்பிரசங்கியாரோ, அவ்வார்த்தையை சந்தேகித்தான். ஏன், அவன் அநேக சமயங்களில்... அவன் ஒரு குழந்தைக்கு தகப்பனாகப் போகிறான் என்றால், சாராளை நோக்கிப் பார்க்க வேண்டும். அவனுக்கு வேதாகமத்திலே சில உதாரணங்கள் உண்டே. தேவாலயத்திலே இருந்த அன்னாளைப் பாருங்கள். அவ்விதமாக அநேக உதாரணங்கள் உண்டாயிருந்தன. இப்படியெல்லாம் இருந்த போதிலும் அவன் சந்தேகப்பட்டான். அச்சிறிய கன்னிகைக்கும், உணர்வற்று மரத்துப்போன நிலையில் உள்ள தத்துவம் போதிக்கும் போதகரான அவ்வேதக்கல்லூரி ஊழியக்காரருக்கும் இடையில் எவ்வளவு பெரிய வித்தியாசம் உள்ளது! அவளோ கேள்வி கேட்கவில்லை. “... இதோ நான் ஆண்டவருக்கு அடிமை...'' என்றாள். (லூக். 1:38) அவ்வளவுதான். அவள் அவன் வார்த்தையை விசுவாசித்தாள். அதுவே தீர்வாயிருக்கிறது. ஆனால் இம்மனிதனுக்கோ விசுவாசிக்க முடியவில்லை. ' ... நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன் ... (லூக்.1:19). ''என்னுடைய வார்த்தைகள் நிறைவேறும்...'' (லூக். 1:20) என்றான். அவன் தான் பேசுவது இன்னதென்று அறிந்திருந்தான். குழந்தை பிறக்கிற நாள் வரையிலும், நீ ஊமையாயிருப்பாய், ஏனெனில் நீ என் வார்த்தைகளை சந்தேகித்தாய் என்று கூறினான் (லூக். 1:20). அவன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் மனைவி கர்ப்பந்தரித்து, ஆறு மாதமளவும் வெளிப்படாதிருந்தாள். 43“ஓ, இது மிகவும் அற்புதமாயுள்ளதல்லவா? இப்பொழுது எனக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது. அங்கே என்னுடைய உறவினளாகிய எலிசபெத்தும் (இயேசுவும், யோவானும் ஒருவருக் கொருவர், பெற்றோரின் ஒன்றுவிட்ட உடன் பிறந்தாரின் பிள்ளைகள் ஆவர்) பிள்ளை பெறப்போகிறாள், எனக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது; அது அற்புதமாயிருக்கப்போகிறது என்றும், இதை இனிமேலும் நான் எனக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கமாட்டேன். நான் போய் அவளிடம் சொல்லப்போகிறேன்'' என்று மரியாள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் தானே தீவிரமாக எழுந்து அம்மலைத் தேசத்திற்கு சென்றாள். அவளுடைய அச்சிறிய அழகிய முகம்பிரகாசிக்கவும், அவளுடைய கறுமை நிற தலை முடிகாற்றில் வீசிக் கொண்டிருக்கிறதையும், சுமார் பதினெட்டு வயதுடையவளாய் அங்கே சென்று கொண்டிருக்கிறதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவள் தன்னை சிறிய அங்கியால் மூடிக்கொண்டிருக்க, அவள் அச்சாலையில் நடந்து செல்லுகிறாள். எலிசபெத் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அவ்விதமான காரியத்தை விரும்புகிறேன். இங்கே தாயாகப் போகிற ஸ்திரீகள் குட்டைப் பாவாடைகளையும், இன்ன பிறவற்றையும் அணிந்து கொண்டு வெளியிலே அலைந்து திரிகிறதைப் பார்க்கையில், அது அவமானகரமாக காணப்படுகிறது. அது பரிதாபமானதாக இருக்கிறது. என்னே ஒரு வித்தியாசம். அது பயங்கரமானதாக இருக்கிறது. நான் அதை சொல்லக்கூடாது என்று நான் அறிவேன். உங்கள் மனதை நான் புண்படுத்தினால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் டாக்டர் சொல்லுவதை கேட்டு நடப்பீர்களே; நான் உங்களுடைய சகோதரன் தான் பாருங்கள். ஆகவே அங்கே ஸ்திரீயானவள் அந்த விதமான நிலையில் இருந்தாள்; ஆனால் அவள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கே உட்கார்ந்து கொண்டு, குழந்தைக்கான துணியில் பின்னல் வேலையான சாக்ஸ் பின்னிக் கொண்டும், சிறிய கம்பளப் போர்வை பின்னிக் கொண்டும், இவ்விதமாக யாவற்றையும் செய்து கொண்டிருக்கிறதை என்னால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறது. ஆனால் அவள் பயந்தவளாய் இருந்தாள், ஏனெனில், அவள், “இப்பொழுது நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கிறேன், மேலும்...'' என்று கூறினாள். 44கர்த்தருடைய தூதனைக் கவனித்துப் பாருங்கள். அவளும் சரி யாவும் நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய சகல கற்பனைகளையும் கைக்கொண்டவர்களாய் நடந்து நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள் (லூக்.1:6). அங்கே தான் தூதர்கள் தோன்றுகிறார்கள். எப்போதும், ஒரு நீதியுள்ள குடும்பத்தில் தான் தோன்றுவார்கள். தேவன் உபயோகிப்பதற்கு தகுதியான, கிரியை செய்ய ஏற்றதானதையே தேவன் தெரிந்து கொள்ளுகிறார். அவள் அந்த சிறிய சாக்ஸ்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள். பாலஸ்தீனத்தில் வைக்கப்பட்டிரு க்கும் ஒரு சிறிய ஜன்னல் இருந்ததாக நான் கற்பனை செய்கிறேன். அதில் ஜன்னல் விளக்கு ஏதும் இல்லை; ஆனால் அதில் சிறிய திரை தொங்கிக் கொண்டிருந்தது. ஏதோ ஓசை அவளுக்குக் கேட்டது. அவள் எழுந்திருந்து பார்த்தபோது யாரோ வருவது போல் காணப்பட்டது. அவள், அங்கே வருவது என் உறவினளாகிய மரியாளைப் போல் காணப்படுகிறது. அவளுடைய சிறிய முகம் பிரகாசமாயுள்ளது. அவள் நன்கு வளர்ந்துவிட்டாள். அவளுக்கு திருமணம் ஆகப் போகிறது என்று கேள்விப்பட்டேன். அப்படித்தான் இருக்க வேண்டும்; நல்லது அவள் ஒரு இளம் பெண்ணாக இருக்கிறாள், ஆனால் அது மரியாள்தான்'' என்று கூறிக் கொண்டாள். ஆகவே, அவள் தனது சிறிய அங்கியை அணிந்து கொண்டு, வெளியே ஓடிச் சென்று அவளைச் சந்திக்கச் செல்லுகிறாள். 45அந்நாட்களிலுள்ள ஸ்திரீகள் இந்நாட்களிலுள் ளவர்களைப் போல் அல்ல. அவர்கள் ஓடிச் சென்று தங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் போட்டு அணைத்துக் கொண்டு தழுவிக்கொள்ளுவர். நட்புப் பாராட்டுதலை நான் விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறு இல்லையா? இந்த பழைய அற்பத்தனமான 1960ம் ஆண்டின் பாணியிலான நட்புத் தன்மையை நான் வெறுக்கிறேன். ஓ, அது போதுமானதாக இல்லை. இப்பொழுது, தென் பகுதியிலுள்ளவர்களே, ஓ, அங்கே, மிகவும் மோசமாக இருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நியூயார்க்கிலுள்ள எனது அங்கிள் ஒருவரின் வீட்டிற்கு சமீபத்தில் நான் சென்றிருந்தேன். அங்கே அவர் இருபது ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த டெக்ஸாஸ் கொடி அதோ அங்கே இருக்கிறதோ, அந்த அளவாய் அவர் வீட்டிருகில் அவரது அண்டை வீட்டுக்காரர் வசித்திருந்தார். 'அங்கே அண்டை வீட்டில் யார் வசிக்கிறார்?'' என்று நான் கேட்டேன். ''எனக்குத்தெரியாது'' என்று அவர் கூறினார். ''நீர் கிருபையினின்று விழுந்து விட்டீர்'' என்று நான் அவரிடம் கூறினேன். “அங்கே அவர் எவ்வளவு காலமாக வசித்து வந்துள்ளார்'' என்று நான்அவரிடம் கேட்டேன். ''நான் இங்குகுடி வந்தது முதல் அவர் அங்கே இருந்து வருகிறார்'' என்றார். உங்களது அண்டை வீட்டுக்காரர் இறந்து போனதை செய்தித்தாளில்படித்துத் தெரிகிற வரையிலும் உங்களுக்கு அதைப் பற்றித் தெரிவதில்லை. அது சரியல்ல. அது நட்புரிமை பாராட்டுவதல்ல. 46சமீபத்தில் நானும், சகோ. மூரும், சகோ. ப்ரெளனும் டேவிட் என்ற பெயருள்ள ஒரு வாலிபனை பார்க்கும்படி சென்றிருந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஃப்ளோரிடாவிலே...அவர்கள் எங்களை அங்கே வரவழைத்திருந்தார்கள். நான் நினைக்கிறேன். அது சகோ. ஹக்ஸ்ட்ரா என்று நம்புகிறேன்; அவர் என்னிடம், ''கோமகனின் மனைவி (பிரபுக்கள் என்ற ஸ்தானத்தில் உள்ளவர்களை கோமகன் என்பர் - தமிழாக்கியோன்) உங்களைக் காண விரும்புகிறார் கள்'' என்றார். யார் அவர்கள்?'' என்று நான் கேட்டேன் 'கோமகனின் மனைவி'' என்றார். “அப்படியென்றால், யார் அது?'' என்று நான் கேட்டேன். ''இங்குள்ள ஆஸ்திகளையெல்லாம் தனக்கு சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி. அவள் மிகுந்த ஆஸ்தியையுடையவள்'' என்றார். ''நல்லது, நான் அவளைப் போய் பார்க்க இயலாது. அநேக வியாதிக்காரர்கள் உள்ளனர்'' என்றேன் நான். ''ஆனால் அவளோ ஒரு கோமகனின் மனைவியாவாள்'' என்றார் அவர். ''அது ஏனைய எவரையும் விட அவளை எந்த விதத்திலும் வித்தியாசமாக்கிவிடவில்லை“ என்றேன் நான். ஆகவே அவர் கூறினார். நான் அங்கே சென்றபோது, அவளை அங்கே இருக்கும்படி செய்திருந்தனர். நான் அங்கே வெளியே சென்றபோது, நான் அப்படியல்ல. நான் அந்தப் பெண்மணியை பரிகசிப்பதாகக் காணப்பட்டால் தேவன் என்னை மன்னிப்பாராக. நான் அவ்வாறு செய்யவில்லை. அவளுடைய கரங்களிலே, ஏராளமான ஆபரணங்களை அவள் அணிந்திருந்தாள். அவைகள் ஒரு மிஷனரியை உலகம் முழுவதிலும் பத்து தடவைகள் சுவிசேஷத்தோடு அனுப்புவதற்குப் போதுமானதாக இருந்தது. அவ்வாறு தான் இருந்தது. அங்கே வெளியே நின்று கொண்டிருந்தாள், அவள் ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடியை, அவற்றினை அணிந்து கொள்ளலாமல், ஒரு கோலில்மாட்டிவைத்திருந் தார்கள். அந்த அம்மையார், பெரியதடித்த உருவத்தை யுடைய வயது போன பெண்மணியாய் இருந்தாள். அவள் வெளியே வந்தாள். நான் கூடாரத்தை விட்டு வெளியே நடந்தேன். அவளைப் பார்க்க எனக்கு நேரமேயில்லை. எனக்கு ஏதாவது நேரம் இருக்குமானால், அங்கேயிருக்கிற வியாதிப்பட்டவர் களையே நான் போய் காணட்டும்“ என்றேன் நான். 47ஆனால் அவள் இம்மைதானத்தை உங்களுக்கு அனுமதித்திருக்கிறாள்'' என்றார்கள். ''நல்லது, டேவிட்டுக்கு இம்மைதானத்தை விட்டிருக்கிறார்கள், அது சரிதான், நாம் அதை மெச்சுகிறோம். ஆனால் அவள் நன்றாகத் தான் இருக்கிறாள், அவளுக்கு எந்த துன்பமும் இல்லை. இங்கேயிருக்கிற இம்மக்களை நான் முதலில் காணட்டும்“ என்றேன் நான். நல்லது, நான் அவளை பார்க்க வேண்டுமென அவர்கள் விரும்பினர். ஆகவே நான் வெளியே சென்றபோது, ''நீங்கள் தான் டாக்டர் பிரான்ஹாம் அவர்களா?'' என்று கேட்டாள் அப்பெண்மணி. ''இல்லை, அம்மா, நான் சகோதரன் பிரான்ஹாம்'' என்றேன் நான். அவள் கூறினாள். எவரும் அவ்வளவு தூரத்திலிருந்து, மூக்குக்கண்ணாடியின் வழியாக பார்க்க முடியாது. அவள் அவ்விதமாக ஏறெடுத்துப் பார்த்தாள். அவள், ''நல்லது டாக்டர் பிரான்ஹாம் அவர்களே, நான் புகையிலையை மென்று கொண்டிருக்கிறேன்'' என்றாள். நான் கிட்டச் சேர்ந்து அந்தக் கையை ஏறிட்டுப் பார்த்தேன் (அவளுடைய கைகளை, கை குலுக்குவதற்காகப் பிடித்தேன்). நல்லது, நான் ஒரு பண்பாளனாக இருப்பேன் என எண்ணினேன். நான் அவளுடைய பெரிய கைகளைப் பிடித்து கீழே இழுத்தேன். இங்கே இறங்கி வாருங்கள், அப்போது நான் அடுத்த தடவை உங்களை சந்திக்க அறிவேன்'' என்றேன். ஓ, ஏதோ ஒரு உணர்வு, நான் அதை விரும்புகிறேன். 48பவுல் ரேடர் - அம்மனிதர் தான், நான் இங்கே பாடும் “நம்பிடுவாய்'' என்ற பாடலை எழுதியவர். அவர் என்னிடம், தனக்கும், தன் மனைவிக்கும் ஒரு நாள் காலையில் ஏற்பட்ட தகராறு பற்றி குறிப்பிட்டார். முதலாவதாக ஏற்பட்டதைப் பற்றிக் கூறினார். அவர் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது அவர் மனைவி, பவுல், நீங்கள் எனக்குக் கொஞ்சம் பணம் தருவீர்களா?” என்று ஏதோ கேட்டாளாம். “என்னிடம் பணம் ஏதும் இல்லை'' என்றாராம் இவர். இவ்வாறு இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேச்சுக்கள் போய்க் கொண்டே இருந்ததாம். அது அவளுடைய உணர்வுகளைப் புண்படுத்தியதை அவர் கண்டு கொள்ளவில்லை. ஒரு மாதிரியாக அவள் அங்கே உட்கார்ந்திருந்தாள். ''நல்லது இவ்வளவு சுலபமாக அவளுடைய உணர்வுகள் பாதிக்கப்படுகிறதென்றால், அவள் அங்கே உட்கார்ந்து இருக்கட்டும்'' என்று கூறியிருக்கிறார். சகோதரரே, சில வேளைகளில், நாமும் இவ்வாறு ஏதாவது செய்யத்தான் செய்கிறோம் என்று நான் கருதுகிறேன். அவர் எப்போது வெளியே புறப்பட்டுச் சென்றாலும், அவள் வாயிற்கதவண்டையிலே நின்று அவரை முத்தமிட்டு வழியனுப்புவது எப்போதும் அவளுடைய வழக்கம் என்று அவர் கூறினார். அதன் பிறகுதான் வாசலுக்குச் செல்வாராம். அதன்பிறகு, அங்கே நின்று கொண்டு திரும்பிப் பார்த்து, கையசைத்துகுட்-பை'' என்று சொல்ல, அவளும் அவருக்கு 'குட்-பை'' என்று கூறி கையசைப்பது வழக்கமாம். அவர் மேலும் கூறினார்; அவர் எழுந்து தனது தொப்பியை எடுத்துக்கொண்டு, ''அவள் வெறுப்பினால் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, இங்கே கிடக்கட்டும்“ என்று தனக்குள் கூறிக்கொண்டு, கதவண்டைச் சென்றாராம். அவளுடைய உதடுகளைத் தள்ளி அவளை முத்தமிட்டு விட்டு, வெளி வாசற்கதவு முடிவு வரையில் சென்றாராம். அங்கிருந்து திரும்பிப் பார்த்தார். அவள் அங்கே வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவள் கையசைத்தாராம். அவளும் கையசைத்தாளாம். சாலையில் அவர் சென்று கொண்டேயிருந்தாராம். ஏதோ ஒன்று அவரோடு இடைபட ஆரம்பித்தது. 'பவுலே நீ தவறு இழைத்திருக்கிறாய். (எளிய, வயது சென்ற பவுல் இன்றிரவில் மகிமையில் இருக்கிறார்) ஆனால், 'பவுலே நீ தவறு இழைத்திருக்கிறாய். இன்று அவளுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன ஆவது?'' என்று அவரிடம் ஏதோ கூறியதாம். அவர் அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாராம். ஓ, அவளுக்கு ஏதாவது சம்பவித்தால் என்ன செய்வது, நீ மீண்டும் அவளை இப்பூமியில் இனி ஒரு போதும் சந்திக்கக்கூடாமல் போய்விடும்'' என்று கூறியதாம். ஓ மை . அது இன்னும் மோசமாக அவருக்கு உள்ளத்தில் ஏற்பட்டதாம். ''கர்த்தாவே என்னை மன்னியும்; நான் திரும்பிப் போய் சரி செய்து கொள்ளுகிறேன்'' என்று கூறினாராம். வேகமாக திரும்பி வந்து, வாசற்கதவைத் திறந்து கொண்டு வீட்டுக் கதவை தள்ளிக் கொண்டு போய் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தாராம். ஏதோ விசும்பி அழும் சத்தம் கேட்டதாம். அவள் அங்கே கதவின் பின்னால் நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவர் ஒரு வார்த்தையையும் சொல்லாமல் அவளை எட்டிப்பிடித்து,அவளை மீண்டும் முத்தமிட்டார். பின்பு, மீண்டும் வாயிற் கதவண்டையில் ஓடிச்சென்று, திரும்பிப் பார்த்து, கையசைத்து விடை பெற்றார். அவளும் கையசைத்து விடை கொடுத்தாள். முதல் தடவை செய்ததைப் போலவே. ஆனால் இரண்டாம் தடவையில் ஒரு உணர்வு உண்டாயிருந்தது. இவ்விதமாக அவர் விவரித்தார். ஆகவே, இன்றைக்கும் அவ்விதமாகத்தான் உள்ளது என்று நான் கருதுகிறேன். உண்மையாக இருக்கக்கூடிய உணர்வுபூர்வமான காரியத்தையே நான் விரும்புகிறேன். 49சமீபத்தில் நானும் எனது மனைவியும், நகரின் உள் பகுதிக்கு சென்றிருந்தோம். ''சகோதரி பிரான்ஹாம் அவர்களே எப்படியிருக்கிறீர்கள்'' என்று ஒரு பெண்மணி கேட்டாள்.' நான் “அன்பே, அப்பெண்மணி உன்னிடம் பேசினாளே'' என்று ஏறெடுத்துப் பார்த்துவிட்டுக் கூறினேன். ''நானும் அவளிடம் பேசினேன்'' என்றாள் அவள். “நல்லது, ஆனால் நீ கூறியது அவள் காதிலே விழவில்லையே. நான் உனதருகில் உட்கார்ந்திருக்கிறேனே எனக்கே கேட்கவில்லையே'' என்றேன் நான். ''ஓ, நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன்'' என்றாள். “ஓ” என்றேன் நான். (ஒலிநாடாவில் இடைவெளி) 50''மரியாளே உனக்குத் தெரியுமா? நான் தாயாகப் போகிறேன்'' என்று அவள் கூறினாள். (எலிசபெத்தைப் பற்றிக் கூறுகிறார் சகோ. பிரான்ஹாம் - தமிழாக்கியோன்) ''ஆமாம், ஆமாம் நான் அதைப் பற்றி அறிவேன்'' என்று மரியாள், தனது சிறிய கண்கள் பிரகாசிக்க, சந்தோஷக் கண்ணீர் வழிந்தோடக் கூறினாள். ''நீ யாவற்றையும் அறிந்திருக்கிறாயோ?'' என்றாள் அவள். ''ஆம் நான் யாவற்றையும் அறிவேன்?'' என்றாள். ''ஆனால் மரியாளே, நான் கவலையடைந்துள்ளேன். நான் தாயாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது, ஆனால் வயிற்றில் உள்ள சிசுவோ அசையவேயில்லை. அதெல்லாம் இயற்கைக்கு எதிரானது என்பதை நீ அறிவாய். மூன்று மாதம் என்றால் பரவாயில்லை, ஆனால் இப்பொழுதோ ஆறு மாதங்கள் ஆகிவிட்டன; இன்னமும் சிறிய யோவான் அசையவேயில்லை. ஆகவே, நான் சிறிது கவலையடைந்துள்ளேன்'' என்று கூறினாள். “ஆம் நான் அதை புரிந்து கொள்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? நானுங்கூட ஒரு குழந்தையைப் பெறப்போகிறேன்'' என்றாள் அவள். “ஓ, நீயும் யோசேப்பும் ஏற்கனவே மணமாகிவிட்டீர்களா?'' என்றாள். இல்லை, எங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை.'' ''என்ன மரியாளே? இன்னும் உனக்கு திருமணமாகவில்லை.ஆயினும், ஒரு குழந்தையைப் பெறப் போகிறாயா?'' ''ஆம் அது சரிதான்'' ''அன்பே , ஓ, நீ என்னதான் சொல்லுகிறாய்?'' 'நல்லது, உனக்கும் ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது என் பதை அதேவிதமாகத்தான் நானும் அறிந்து கொண்டேன். காபிரியேல் தூதன் என்னை வந்து சந்தித்து, உன்னைப் பற்றி கூறினான். மேலும், என் மேல் பரிசுத்த ஆவி நிழலிடும் என்றும் கூறினான். அது ஏற்கனவே நடந்துவிட்டது. நான் பெறப்போகும் பிள்ளை தேவனுடைய குமாரன் என்னப்படும். அவருக்கு என்ன பெயரிட என்றும் என்னிடம் அவன் கூறினான். நான் அவரது பெயரை இயேசு என்று அழைப்பேன்“என்று மரியாள் கூறினாள். அப்போது எலிசபெத்தின் முகம் பிரகாசமடைந்ததை என்னால் காண முடிகிறது. ''என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.' (லூக்கா 1:43, 44) என்று அவள் கூறினாள். 51சிநேகிதரே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். முதன் முதலாக அழிவுள்ள உதடுகளால், இயேசுகிறிஸ்துவின் நாமமானது கூறப்பட்ட பொழுது, ஒரு தாயின் வயிற்றில் மரித்துப் போன நிலையில் இருந்த ஒரு குழந்தையை உயிரடையச் செய்யக்கூடுமானால், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் மறுபடியும் பிறந்த ஒரு சபைக்கு அது எந்தளவாய் செய்ய வேண்டும்? அல்லேலூயா! ஆமென். அதுதானே, புற்று நோயைக் குணமாக்க வேண்டும். குருடான கண்களைத் திறக்க வேண்டும், கட்டுண்டவர்களை விடுதலையாக்க வேண்டும். பரிசுத்த ஆவியினால் நிரப்ப வேண்டும்; அந்த விலையேறப் பெற்ற கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே இன்னும் அனைத்து விதமான காரியங்களையும், பாவி தன் பாவங்களுக்காக அழும்படியாகவும் செய்தாக வேண்டும், ஓ,என்னே. இந்தக் கூட்டமானது சுற்றிலும் தீவிரமாக நீந்துவதைப் போல் அசைகிறதை நான் காண்கிறேன். ஓ, இப்பொழுதே என்னவெல்லாம் தேவனால் செய்ய இயலும். தேவனுடைய பரிசுத்த ஆவியாகிய தூதனானவர் இன்று இக்கட்டிடத்தில் இருக்கிறார். செய்தியாளனாகிய பரிசுத்த ஆவியானவர் சமாதானத்தைக்கொண்டு வருகிறார். இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறார். நம்மேல் மகத்தான அக்கினி ஸ்தம்பமானது தொங்கிக் கொண்டிருக்கிறது? 'நான் அதைக் காணவில்லை'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் அதை உணர முடியும். சரீரத்தின் ஒரு புலனானது மற்றொன்றைப் போலவே நல்லதாக இருக்கிறது. உங்களுடைய உணருதலைவிட, உங்களுடைய பார்வை உங்களை ஏமாற்றக் கூடும். ஆகவே, அது அதே கிரியையை செய்யாவிடில், அது அதே பரிசுத்தாவியல்ல ; ஆனால் அது அதே கிரியை செய்தது என்றால், அது அதே பரிசுத்த ஆவியானவர்தான். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாவிகள் எத்தனை பேர்கள் உள்ளனர்? ''நானுங்கூட இவ்வாசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிறேன். உங்களோடுகூட ஷெகினா மகிமையின் கீழாக உட்கார்ந்திருந்து, தேவனுடைய ஆசீர் வாதங்களை அனுபவிக்க விரும்புகிறேன்'' என்று இங்கே எத்தனை பேர்கள் சொல்ல விருப்பப்படுவீர்கள்? சகோ. பிரான்ஹாமே, நீங்கள் ஜெபிக்கையில், என்னை நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்திக் கூறுவீர்களா? சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதோ அங்கே இருக்கிற நீங்கள், நீங்கள். நீங்கள். அது சரியானது. அதோ இன்னொருவர், 'சகோதரர் பிரான்ஹாமே என்னை நினைத்துக் கொள்ளுங்கள்“ என்று கூறி தன் கரத்தை உயர்த்துகிறார் . இளைஞனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையாக இருக்கிறது. 52இன்று காலையில் நான் காலை சிற்றுண்டிக்காகப் போய்க்கொண்டிருக்கையில், ஒரு இனிய சிறுவன் என்னிடமாக வந்து, தன் கரங்களை என் கழுத்தைச் சுற்றிப்போட்டுக் கொண்டான். அவனுடைய தந்தையார், இங்குள்ள அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் சபையின் மேய்ப்பர்களுள் ஒருவராவார். அவர் மேடையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்று காலையில் இருந்தார். அச்சிறுவன் கூட்டத்தில் எங்கோ இருந்தான். அவன் பெயர் சொல்லி அழைக்கப்பட்டான். அவனுக்கு மாறுகண் இருந்தது. இப்போது அவனுடைய கண்கள் எனது கண்களைப் போல் நேராக ஆகிவிட்டன. அது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. இன்னொரு சிறிய சகோதரன் மேலே வந்து எனது கரத்தைக் குலுக்கினார். அவருடைய சிறிய பெண்ணுக்கு அவளது தொண்டையில் பெரிய குரல்வளைச் சுரப்பி வீக்கம் உண்டாயிருந்ததாகக் கூறினார். நான் அப்போது ஜேக் மூர் அவர்களுடைய சபையில் இருந்தேன். அவர் மேலும் கூறியதாவது பரிசுத்த ஆவியானவர் அசைவாடி மக்கள் மத்தியயிலிருந்து அவளுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டதாகவும் அவளுடைய நிலையைக் கூறியதாகவும் கூறினார். குரல்வளைச் சுரப்பி வீக்கமானது உடனே மறைந்து போய்விட்டது. அதோ அவள் இருக்கிறாள். ஓ, என்னே . அது என்னவாயிருக்கிறது? அந்த அக்கினி ஸ்தம்பமானது என்ன? அது கர்த்தருடைய தூதனானவர் ஆவார். கர்த்தருடைய தூதனானவர் என்றால் என்ன? எரிந்து கொண்டிருந்த முட்செடியில் தோன்றியவர்தான் அவர். இயேசு கிறிஸ்துவிலே இருந்தவர்தான் அவர். இன்றிரவில் உங்களில் இருக்கிறவர் தாமே அவர். ஆமென். இங்கே இருக்கிற அவர் தாமே அதே மகத்தான கர்த்தராகிய இயேசு ஆகும். 53நான் ஜெபிப்பதற்கு முன்னர், 'என்னை நினைத்துக்கொள்ளுங்கள், சகோதரன் பிரான்ஹாமே, என்னை நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று வேறு யாராவது இருந்தால், உங்கள் கரங்களை உயர்த்த விரும்புவீர்களா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அதோ அங்கே வெளியே, பின்னால் உள்ள அச்சிறுவன், ஆம் அவன்தான், நீ எங்கேயிருந்தாலும் சரி, தேவன் அறிவார். இப்பொழுது நாம் சற்று நேரம் நம் தலைகளை வணங்குவோமாக. இப்பொழுதும், சகோதரியே, எனக்காக, “மகத்தான வைத்தியர் இப்போது இங்கே அருகில் உள்ளார்'' என்ற பாடலை இசைக்க முடியுமா? உங்களால் முடிந்தால் இசையுங்கள். தயவு செய்து. 54போர்ட் வேய்ன், இந்தியானாவில் நடந்ததை நான் நினைவு கூறுகிறேன். நான் பிரசங்கபீடத்தில் முப்பத்தியொரு ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறேன். இது சம்பவித்தது இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக. நான் ஒரு சிறு பையனுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது இசையானது இசைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. அச்சிறுவன் குணமடைந்தான். உடனே அவன் என்னுடைய கரங்களில் இருந்து விடுபட்டு ஓடிச் சென்று தன் தாயின் கரங்களைப் போய் அடைந்தான். முடக்குவாதத்தால் அவதிப்பட்டவன் அவன். அவன் அவ்வாறு செய்த போது, பியானோவை ஒரு சிறிய டங்கார்ட் பெண் (Dunkard Girl) வாசித்துக் கொண்டிருந்தாள். (டங்கார்ட் பெண் என்றால் (Dunkard Girl) ஜெர்மானிய- அமெரிக்க பாப்டிஸ்ட்டுகளாகிய ஒரு பிரிவினர் - இவர்கள் சரியானபடி, சர்ச் ஆஃப் த ப்ரெத்ரென் (Church of the Brethren) என்று அழைக்கப்படுகிறார்கள் - தமிழாக்கியோன்) அவள் எழுந்தாள். அதனால் அவளுடைய தலை முடியானது விழுந்தது; அவள் ஆவியில் பாட ஆரம்பித்தாள், அவள் இசைத்துக் கொண்டிருந்த பியானோவின் தந்தக்கட்டைகள் (அவள் தொடாமலேயே) தானாகவே தொடர்ந்து,“மகத்தான வைத்தியர் அருகில் உள்ளார், அனுதாபப்படும் இயேசு உள்ளார்'' என்று பாடலை இசைத்துக் கொண்டிருந்தது? நூற்றுக்கணக்கான மக்கள் எழுந்து நின்று அதைப் பார்த்தனர். கடந்தவாரத்திற்கு முந்தின ஞாயிறன்று, எனது கூடாரத்தில் முந்நூறு முதல் நானூறு பேர்கள் அங்கே நின்று கொண்டிருக்க, இதே அக்கினி ஸ்தம்பமானது ஜெபர்சன்வில்லில் இரண்டாவது தடவையாக காணத்தக்கதாக தோன்றியது. முதலாவது தடவையாக அங்கே நதிக்கரையிலே அதைப் படமெடுத்தபோது தோன்றியதாகும். அங்கே அவர் பதினைந்து நிமிடங்கள் நின்றிருந்து, யாவரும் தன்னைக் கண்டு ஏறெடுத்துப் பார்க்கும்படி அனுமதித்தார். சகோதரனே, நாம் சாலையின் முடிவிலே வந்திருக்கிறோம்.“ 55எங்களது பரம பிதாவே, இப்பொழுது நாங்கள் ஜீவனுள்ள கல்லாகிய உம்மிடத்திலே வருகிறோம், கர்த்தாவே, நாங்கள் வருகிறோம் கர்த்தாவே, ஏனெனில், நீர் உண்டென்றும், உம்மை ஊக்கமுடன் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். உம்முடைய ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் வேண்டுகிறோம். இன்றிரவிலே, நீர் இங்கு கூடி வந்திருக்கிறவர்களுக்கு உதவ வேண்டுமென வேண்டுகிறோம். தங்கள் கரங்களை உயர்த்தினவர்கள், இக்கடைசி நாளுக்கென உள்ள செய்தியாளனாகிய இந்த மகத்தான பரிசுத்த ஆவியானவரில் பங்கெடுத்துக் கொண்டவர்களாக இருப்பார்களாக. மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்...''என்று நீர் வாக்குரைத்தீர்.(யோவேல் 2:28). கடைசி நாட்களிலே, பின் மாரியும், முன்மாரியும் உண்டாயிருக்கும் என்று நீர் கூறினீர். (யோவேல் 2:23). அதாவது, பூமியின் ஒரு திசையிலும், பூமியின் மறுதிசையிலும் ஒரு மழையானது வரும். வெளிநாடுகளில் உள்ள களங்களிலும், இங்கேயுள்ள களங்களிலும் ஒரு மழையானது வரும். ஆகவே அந்த வேளையானது இதோ இங்கே வந்திருக்கிறது என்று நாம் விசுவாசிக் கிறோம். முன்பு அவர் இங்கே இருந்தபோது எவைகளைச் செய்தாரோ அதே காரியங்களை பரிசுத்த ஆவியானவர் பிரத்தியட்சமாக்குகிறதை நாங்கள் காண்கிறோம். பிதாவே, இந்த அருமையான மக்களை ஆசீர்வதியும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்களை கிட்டிச்சேரும். அவர்களுக்கு நித்திய ஜீவனைத்தாரும். கர்த்தாவே அளித்தரு ளும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தி னாலே அவர்களை இப்பொழுது உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். நம்முடைய தலைகள் வணங்கியிருக்கையில், இன்னும் சிறிது ஜெபிப்போமாக. 56''அம்மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகாமையில் உள்ளார், அனுதாபப்படும் இயேசு உள்ளார். துயரப்படும் இருதயத்தை மகிழ்ச்சியடையச் செய்வார். ''ஓ பரிசுத்த ஆவியானவரே எங்கள் மேல் ஊதும். உம்முடைய சபைக்குள் வாரும், கர்த்தாகிய இயேசுவே நீர் விடிவெள்ளி நட்சத்திரம், நீர் அக்கினி ஸ்தம்பம், இன்று இராத்திரியிலே, மக்களுடைய இருதயங்களில் உள்ள அவிசுவாசத்தை சுட்டெரித்து, பிரவேசிப்பீராக. அவர்கள் மரியாளைப் போல் உம்முடைய சமுகத்தை கண்டுகொள்ளவும், நீர் தான் அது என்று கண்டு கொள்ளவும் இயலும்படி அவர்களுக்குச் செய்தருளும். அப்போது, உமது ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும், இன்னமும் நல்லதாகவும் இருக்கும். இதை நீர் செய்வதாக வாக்குரைத்தீர். நீர் அவர்களை ஏற்கனவே சுகமளித்தீர்; இதுவே உமது வாக்குத்தத்தம். ஏனெனில் அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தம் காயப்பட்டுள்ளீர்; அவரது தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள் என்று இருக்கிறது. காத்து நிற்கும் இந்த கூட்டத்தினருக்கு, பிதாவே, இதை அளித்தருளும். நாங்கள் உமக்காக இப்பொழுது காத்து நிற்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தினாலே அசைவாடும் என்று நான் ஜெபிக்கிறேன். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் காணும்படியாக சற்றுநேரம் கவனித்திருக்கப் போகிறோம். ஓ, எவ்வளவு இனிமையாயுள்ளது. இப்போது எளிதாக நாம் நம் தலைகளை உயர்த்துவோமாக. நீங்கள் அமரிக்கையாக இருக்கச் செய்யும்படி உங்களுக்காக நான் காத்திருந்தேன். இங்கே எத்தனை பேர்கள் வியாதியஸ்தர்களாயிருந்து, ஜெப அட்டைகள் இல்லாமலிருக்கிறீர்கள்? தேவன் உங்களை குணமாக்கும்படி உங்கள் கரங்களை உயர்த்திடுங்கள். மூன்று ஒரு உறுதிப்பாடாயிருக் கிறது என்று நான் நம்புகிறேன். வேதத்தின்படி அது சரிதானே? நான் சத்தியத்தைக் கூறியிருந்தால், சத்தியத்தை நான் பிரசங்கித்திருந்தால், அப்போது, தேவன் அச்சத்தியத்தை ஆதரிக்க கடமைப்பட்ட வராயிருக்கிறார். அது அவரது சத்தியமாயிருந்தால். 57இப்பொழுது இங்கே ஒரு குவியல் ஜெப அட்டைகள் உள்ளன. நாம் அவர்களை அழைக்கப் போகிறதில்லை. ஜெப அட்டைகளினால் ஒன்றும் ஆவதில்லை என்பதை நீங்கள் அறியவேண்டுமென நான் விரும்புகிறேன். அதனால் ஏதாவது பலன் உண்டோ என்று ஊழியக்காரர்களைக்கேட்டுப் பாருங்கள். என்னோடு எவ்விடங்களுக்கும் கூடவே வருகிற சகோதரர்களைக்கேட்டுப் பாருங்கள். நாங்கள் சாலையில் வாகனத்தில் போய்க் கொண்டிருப்போம். நான் அப்போது சொல்லுவேன், 'சற்றுப் பொறுங்கள், இன்னொரு மூலையிலே, அங்கே ஒரு குறிப்பிட்ட காரியமானது இருக்கப்போகிறது. ஒரு மனிதன் அங்கே நின்று கொண்டிருப்பான். அவனுக்கு ஒரு குறிப்பிட்ட காரியம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நான் போகும்படி அவன் விரும்புவான். ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக என்பேன். நாம் இன்ன இடத்திற்குப்போகப் போகிறோம், இன்ன காரியம் சம்பவிக்கப் போகிறது'' என்று கூறுவேன். நிச்சயமாக. அது ஒரு போதும் தவறு வதேயில்லை. அது தவறவே முடியாது. அது தேவனாயிருக்கிறது. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? அவர் மாறாதவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அது நான் அல்ல. அது அவரே தாம். 58இந்த இரு சிறு பெண்களைத் தவிர இங்கு வேறு யாரையும் எனக்கு முன்பாக, நான் அறிந்திருக்கவில்லை. இது சகோதரர் ஈவான்ஸின் இரு பெண்கள். அது சரிதானே? இங்கே நான் அறிந்திருக்கிறவர்கள் இவர்கள் தான். உண்மையிலேயே இங்கே நான் வேறு யாரையாவது ஏற்கனவே அறிந்திருக்கிறேனோ என்று ஏறெடுத்துப் பார்க்கிறேன். ஆனால் நான் அறிந்தவர்கள் யாரென்றால், நான் சற்று நேரத்திற்கு முன்பாக சகோ.ஈவான்ஸை இங்கு எங்கோ பார்த்தேன். ஆனால் இப்போது அவரை நான் காணவில்லை , ஓ, ஆம், இங்கே ஒஹையோவிலிருந்து டாஷ் அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்.சகோதரன் பில் டாஷ் எனது நண்பராவார். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோதரிடாஷம் உள்ளார்கள். அங்கே சகோதரி ஈவான்ஸ் உள்ளார்கள். பின்னால் அவர்கள் உட்கார்ந்திருக்கிறதை நான் கண்டு கொண்டு விட்டேன். எல்லாம் சரி, அதோ அந்தப் பக்கமாக, சகோ. ஈவான்ஸ் அல்லது சகோதரி இவான்ஸ். சகோதரன் வெல்ச் எங்கேயிருக்கிறார்? அதோ அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிறார், சரி. ஆகவே, நீங்களெல்லாரும் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக, உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். என்னை நீங்கள் அறிந்ததும், நான் உங்களை அறிந்ததும் உண்டானால் அப்படிப்பட்டவர்கள் உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். எல்லாம் சரி, பாருங்கள். உங்களை நான் அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்திருக்கிறவர்கள், நீங்கள் வியாதிப்பட்டிருந்தால் உங்கள்கரங்களை உயர்த்திக் காட்டுங்கள். உங்கள் கரங்களை உயர்த்திடுங்கள். எங்கு உள்ளது என்று பாருங்கள். பார்த்தீர்களா? ஏறத்தாழ எங்கும் காணப்படுகிறது. சரி. 59இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று இருக்குமானால், ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று வேதாகமம் கூறுகிறது. அது சரிதானே? அந்த வார்த்தை மாம்சமாகியது. அவர் தேவனுடைய வார்த்தையை உரைத்தபோது, வார்த்தை மாம்சமாகியது. நீங்கள் உட்கார்ந்திருக்கிற பூமியின் தூள் தானே தேவனுடைய வார்த்தையின் பிரத்தியட்சமாகுதலாக உள்ளது என்பதை அறிவீர்களா? அது தேவனுடைய வார்த்தை பிரத்தியட்சமாகியதாக உள்ளது. அது அவ்வாறில்லாவிடில், அது எங்கேயிருந்து வந்தது. இல்லாதவைகளில்லிருந்து அவர் உலகத்தை உண்டாக்கினார். அவர் பூமியை ஒன்றுபடுத்திக் கொண்டு வருகிறார். அவர் வார்த்தையை மட்டுமே உரைத்தார். ''... உண்டாகக்கடவது...'' என்று மாத்திரமே அவர் கூறிட அவை உண்டாயிற்று. அவர் ஒரு சிருஷ்டிகர். அது சரி. ஆகவே நீங்கள் அமர்ந் திருக்கிற அந்த இருக்கை, தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. தளம் போடப்பட்டு அது அமர்ந்திருக்கும் மண்ணானது தேவனுடைய வார்த் தையாயிருக்கிறது. இவையாவும் பூமியின் தூளிலிருந்து வந்தவை, அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. நீங்கள், நீங்கள் தாமே , தேவனுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள், அது சரிதான். அப்படியாயின், அங்கேயிருக்கிற அச்சிறிய இருதயமானது, அதிலிருந்து அனைத்து சந்தேகத்தையும் ஏன் வெளியேற்ற முடியவில்லை? அது அவ்வாறே ஆகட்டும். 60இப்பொழுது, “... தேவனுடைய வார்த்தையானது. இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபி.4:12). தேவனுடைய வார்த்தையானது இயேசு தாமே. அது சரிதானே? இப்பொழுது, வார்த்தையானவர் இங்கே இருந்து, மாம்சமாகி, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக நம் மத்தியில் வாசம் செய்த போது, ஒரு எளிய பெண்மணி அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை விசுவாசத்தினால் ஒருநாள் தொட்டாள். அதை அவர் சரீரப்பிரகாரமாக உணரவில்லை. ஆனால் சுற்றுமுற்றும் பார்த்து, ''என்னைத் தொட்டது யார்? என்று கேட்டார். “ பேதுரு கூட அவரை கடிந்துகொண்டு, ''ஆண்டவரே, எல்லோருமே உம்மை தொட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்'' என்று கூறினான். ''.... என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்...'' (லூக்கா 8:46) நான் பெலவீனமடைந்தேன். என் பெலன் என்னை விட்டு அகன்றது என்று கூறினார். அவர் சுற்று முற்றும் மக்கள் கூட்டத்திற்குள் பார்த்தார். அங்கே ஒரு சிறிய பெண்ணைக் கண்டார். அவளுக்கிருந்த பெரும்பாடு நோயைப்பற்றிக் கூறி, அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது, அவள் குணமானாள் என்று கூறினார். அது சரிதானே? ''நான் இதைச் செய்தேன்“ என்று அவர் ஒருக்காலும் கூறவேயில்லை. ”உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது...'' (லூக். 8:8) என்று கூறினார். 61இப்பொழுது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதானஆசாரியர் அவரே என்று எபிரேயர் புத்தகம் கூறுகிறது (எபி.4:15). அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றால், அதே பிரதான ஆசாரியர் உள்ளத்தை நீங்கள் தொட்டால், அதே பிரதான ஆசாரியர் அதேவிதமாக கிரியை செய்வார். முதல் தடவையில் அவர் எவ்விதமாக கிரியை செய்தாரோ, அதே விதமாகத்தான் இரண்டாவது தடவையும் கிரியை செய்தாக வேண்டும். இப்போது அவர் செய்யாவிடில், அப்படியென்றால், அவர் முதல் தடவையில் தவறாக கிரியை செய்துவிட்டார் என்று அர்த்தமாகும். முன்பு யூதருக்கும், சமாரியருக்கும் அவர்களுடைய மனதில் உள்ள சிந்தைகளைப் பகுத்தறிந்து, அவர்கள் யார் என்றும், என்னவாயிருந்தார்கள் என்றும் கூறி, இன்னும் இது போல காரியங்களைச் செய்தும், அல்லது அவர்கள் செய்ததைப் பற்றியும் கூறி தம்மை அவர்களுக்கு மேசியாவாக அறியப்படுத்தினார் என்றால்.... அவர் தம்மை தெரியப்படுத்தும் வழி அது தான் என்றும், அதுவே சத்தியம், அதாவது வேதசத்தியம் என்றும், எத்தனை பேர்கள் அறிவீர்கள்? நல்லது, அந்த விதமாகத்தான் தம்மை யூதருக்கும், சமாரியருக்கும் தெரியப்படுத்தியிருந்தால், புறஜாதியாருக்கும் அதே விதமாகத்தான் தம்மை அறியச் செய்ய வேண்டியவராய் இருக்கிறார். அப்படியில்லை யென்றால், அவர்கள் தவறாக தம்மை அறியச் செய்துவிட்டார் என்று அர்த்தம். நான் சொன்னதை புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது, அதை விசுவாசிப்பவர்கள் யாவரும், அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறி உங்கள் கரத்தை உயர்த்திடுங்கள். உங்களுக்கு நன்றி. அதைச் செய்து விட்டது அது. “உன்னை விசுவாசிக்கும்படி மக்களை ஆக்க உன்னால் கூடுமானால் ” என்று தூதன் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? என்னை விசுவாசிப்பதல்ல, அவரைத் தான்; ஆனால் உங்களிடம்மாக அவர் என்னை அனுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஜெபித்து, அவரது உள்ளத்தைத் தொடுங்கள். அவர் என்னை இந்த மேடையிலிருந்து திரும்பி நிற்கும்படி செய்து, உங்களிடமாகப் பேசும்படி செய்வாரென்றால், அது சரியா, தவறா என்பதை நீங்களே நியாயந் தீர்த்திடுங்கள். அது சரியா அல்லது தவறா என்பதை நீங்களே தீர்ப்புக் கூறுங்கள். 62நீங்கள் கூறுகிறீர்கள்... என்னை விட்டு இப்பொழுது நான் ஒரு மனிதன் என்ற முறையில் உங்கள் பார்வையை விலக்கிக் கொண்டு, ''கர்த்தராகிய இயேசு எனக்கு தேவைப்படுகிறார்' என்று கூறுங்கள். உங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லையென்றால், நீங்களாக ஒரு வழியை கண்டுபிடிக்க முயலாதீர்கள்; இறுக்கத்திலிருந்து உங்களைத் தளர்த்திக் கொண்டு, ''கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்; என் மனதில் ஒரு சந்தேகமும் இல்லை; அம்மனிதனுக்கு என்னை யார் என்று தெரியாது, நான் அவரை விட்டு தூரமாக தள்ளி நிற்கிறேன். நான் இக்கூட்டத்தின் பின்னால், வளையத்தைச் சுற்றி மிகவும் பின்னால் நின்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நான் உம்மை விசுவாசிக்கிறேன்; என்பதை நான் அறிவேன். உம்மை தொடும்படி என்னை நீர் அனுமதிப்பீர் என்றால் அவர் என்னிடமாக திரும்பட்டும். அப்பொழுது அது சகோ. பிரான்ஹாம் அல்ல என்று அறிவேன். ஏனெனில் அவருக்கு என்னைத் தெரியாது. நான் யார் என்பதும் அவருக்குத் தெரியாது; அல்லது நான் என்ன செய்தேன் என்பதும், அல்லது நான் செய்யப்போகிறேன் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால் நீர் அதை அறிந்திருக்கிறீர். ஆகவே நீர் அவர் திரும்பும்படி செய்வீரென்றால், அப்போது நீர் தான் இதை செய்கிறீர் என்று அறிவேன். நான் அவரது செய்தியை அப்போது விசுவாசிப்பேன். ஏனெனில் நீர் அவரை உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருக்கிறீர். நீரே அவர் மூலமாகப் பேசுகிறீர்“ பாருங்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? தங்கள் கண்களுக்கு முன்பாகவே அது செய்யப்பட்டி ருக்கிறதை காணக்கூடுமென்றால், எத்தனை பேர்கள் அதை விசுவாசிப்பீர்கள்? ஏதோ ஒரு இருட்டறையில் அல்ல. நம்முடைய கர்த்தர் செய்தது போலவே, பகிரங்கமாக யாவர் முன்னிலையிலும் இங்கேயே தான். அது இரகசியமானதாக அல்ல; அது இதோ இங்கேயே தான். அது இரகசியமானதாக அல்ல; அது இதோ இங்கேயே இருக்கிறது. அது விசுவாசிகளுக்கு மாத்திரமே உரியது. இப்பொழுது ஜெபியுங்கள். 63நான் ஒருவேளை தவறாக இருக்கக்கூடும். அது இங்கே எங்கோ இருக்கிறது என்று நான் நினைத்தேன்; ஆனால் அது அவ்வாறு தான் இருக்க வேண்டும். நான் அதைக்கவனிப்பேன்; அது ஒரு ஒளியாகும். இந்தப் பக்கத்திலுள்ள வியாதிப்பட்டவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளார்களா? அவர்கள் என்னை அறிந்திருக்கவில்லையா? இப்பொழுது இதோ இங்கே அவர் இருக்கிறார். அப்படங்களைப் பார்க்கிறவர்களே, காமராவின் இயந்திரக்கண்கள், அநேக மக்கள் அதைக் காணுமுன்னர், அதைப் படம் பிடித்துவிட்டது என்பதை சற்றுநினைத்துப் பாருங்கள். இன்றிரவில் நான் மரிக்க நேரிட்டால், பூமியின் மேல் இது எனது கடைசி நாளாக இருக்குமென்றால், என்னுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. காமராவின் இயந்திரக் கண்கள் வெவ்வேறு தேசங்களிலும் ஏழு அல்லது எட்டு தடவைகள் அதை நிரூபித்திருக்கிறது. அது உண் மையாயிருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள சபையானது அதை அறிந்திருக்கிறது. நான் சத்தியத்தை கூறியிருக்கிறேன். ஏனெனில் நான் அவரைக் குறித்துப்பேசுகிறேன்.எனவே தான் நான் பயப்படவில்லை; ஆனால் அவர் கூறியது சத்தியமாயிருக்கிறது என்று உறுதிப்படுத்துவார்; ஏனெனில் நான் என்னைக் குறித்து சாட்சியிட வில்லை; அவரைக் குறித்தே நான் சாட்சியாகக் கூறுகிறேன். இப்பொழுது உண்மையாக பயபக்தி யோடு இருந்த விசுவாசியுங்கள். ''எதற்காக சகோ. பிரான்ஹாமே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்''? என்று கேட்கிறீர்கள். நான் அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு சொல்லாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வளவுதான். ஒன்றைச் செய்வதற்கு உங்களுடைய விசுவாசம் அவசியமாயிருக்கிறது. அல்லது, ஒருவேளை அவர் அதைச் செய்யும்படி, நம் மேல் பிரியமாயிருக்கவில்லை என்பதாகும். எத்தனை பேர்களிடம் ஜெப அட்டைகள் உள்ளன? யாரிடமாவது ஜெப அட்டைகள் உள்ளனவா? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, சுமார் எட்டு அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது. அவர் அதைச் செய்யாவிடில், நாம் அவர்களை அழைப்போமாக. ஜெப அட்டைகள் இல்லாமலேயே அது செய்யப்படுவதை நான் விரும்புகிறேன், ஏனெனில், அது நடப்பதற்கு ஜெப அட்டைகளினால் ஒரு பொருட்டல்ல என்பதை நீங்கள் காணலாம். 64தேவனே, இன்றிரவில் எங்களுக்கு உதவி செய்யும். இப்பொழுது நீர் அதை அளிப்பீர் என்று நான் ஜெபிக்கிறேன். நல்ல விசுவாசத்தோடு நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் அதைச் செய்வீர் என்று விசுவாசித்தவனாக, நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் எனக்கு இப்பொழுது உதவிட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். உம்முடைய ஆவியை எனக்குத் தாரும் கர்த்தாவே, உம்முடைய மகிமைக்காக இருக்கும்படி அதை அளித்தருளும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென். ஆம், இதோ இங்கே வந்துவிட்டது. கர்த்தாவே உமக்கு நன்றி, ஸ்திரீயே, அந்த ஹெர்னியாவிலிருந்து (குடலிறக்கம் - தமிழாக்கியோன்) தேவன் உன்னை சுகமாக்குவார் என்பதை விசுவாசிக்கிறாயா? உன்னை குணமாக்குவாரா? யாவும் சரிதான். அதை ஏற்றுக்கொள். உன்னுடைய கரத்தை உயர்த்து. அது சரிதான். உன்னிடம் ஜெப அட்டை உண்டோ ? உன்னிடம் இல்லை. உனக்கு அது அவசியமில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் அந்தப் பெண்மணியை கண்டதே இல்லை. அருமையான சகோதரியே நாம் ஒருவருக்கொருவர் அன்னியர் தானே? நான் உங்களை அறியேன். அது சரியென்றால், இம்மக்கள் கூட்டம் காணும்படியாக உமது கரத்தை உயர்த்திடுவீராக. அதுதானே உமது தொல்லையாயி ருந்தது? அங்கே உட்கார்ந்து கொண்டு ஜெபித்தது நீங்கள் தானே? இப்பொழுது உம்மை நான் தொடர்பு கொண்டேன். “நானாக. அது இருக்கட்டும்'' என்று நீங்கள் இயேசுவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரிதானே? உங்களுடைய கரத்தை அவ்வாறு அசையுங்கள். உங்களுடைய கரத்தை உயர்த்தி அவர்கள் காணும்படியாக அசைத்திடுங்கள். இப்பொழுது, அவள் எதைப்பற்றி ஜெபித்துக்கொண்டி ருந்தாள் என்றும், என்ன வார்த்தைகளை அவள் சொன்னாள் என்றும் எவ்வாறு நான் அறிந்தேன், நீங்கள் காணவில்லையா? அது கிறிஸ்து வாயிருக்கிறது. இங்கே ஒரு சிறிய பெண்மணி இப்படியாக நகர்ந்து இப்பொழுது அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சகோதரியே, உன் இருதய நோயிலிருந்து குணமடைய விரும்புகிறாய் அல்லவா? இங்கே நீ வர வேண்டியது அவசியமல்ல. இந்தப் பக்கமாகப் பார். நீ உனது இருதய நோயிலிருந்து விடுதலை பெற விரும்புகிறா யல்லவா? நல்லது உன் கரத்தை உயர்த்தி, ''நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறு, எல்லாம் சரி. வீட்டுக்குப் போ, உன் இருதய நோய் தீர்ந்துவிட்டது. இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். 65அவளுக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கிற அச்சிறிய பெண்மணியே, உனக்கு ஸ்திரீகளுக்குள்ள தொல்லை உள்ளது. அது சரியென்றால், எழுந்து நில். அது சரி. உன்னிடம் ஜெப அட்டை ஒன்று உள்ளதா? உன்னிடம் ஒன்று இருக்கிறது. நான் உன்னை அழைக்கும்படி நோக்கங்கொள்ளவில்லை. நல்லது, வீட்டுக்குப்போ. நீ உன் கண்களில் உண்டான உபாதையினால் கவலை கொண்டிருக்கிறாய். அவைகள் இன்னும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. அது சரிதானே. உன் கரத்தை அசை. நீ கண்ணாடி அணிந்திருக்கிறதினால் அல்ல, ஆனால் அவைகள் மோசமடைந்து கொண்டே இருக்கின்றன. அது சரி. இனிமேல் அவைகள் அவ்வாறு இருக்காது. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கினார், வீடு திரும்புவாயாக. எனக்கு ஒரு தயவு செய்யுங்கள், செய்வீர்களா, என்கிறீர்கள். நீ ஒரு அட்டை வைத்திருக்கிற படியினால், அவர்கள் அறிந்து கொள்ளும்படியாக உனக்கு அருகில் இந்தப்பக்கமாக உட்கார்ந்து இருக்கிற அந்தப் பெண்மணி குரல்வளைச் சுரப்பி வீக்கத்தினால் வருந்துகிறாள். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குவார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? அது ஒரு உட்பக்கமாக உள்ள குரல்வளைச் சுரப்பி வீக்க நோயாகும். ஆனால் அதெல்லாம் சரிதான். விசுவாசி , அது உன்னைவிட்டு அகன்றுவிடும். எல்லாம் சரிதான். 66நான் தேவனுடைய தீர்க்கதரிசி தான் என்று நீ விசுவாசித்தால், உனதருகிலுள்ள அழுது கொண்டிருக்கிற அந்த ஸ்திரீயின் மேல் உன் கரத்தை வைத்திடுவாயாக. கர்த்தருடைய தூதனானவர் அவளுக்கு மேலாக இருந்து கொண்டிருக்கிறார். அவளுக்கு தன் தலையில் ஒரு உபாதையைக் கொண்டிருக்கிறாள். அது சரிதான் என்றால், இதோ இப்பொழுது அழைக்கப்பட்ட பெண்ணே, எழுந்து காலூன்றி நில். சரி. அது உண்மையென்றால், தன் கையில் கைக்குட்டையை வைத்துக்கொண்டிருக்கும் பெண்மணியே எழுந்திரு. சரி, இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். குணமடைந்தவளாய் வீடு திரும்புவாயாக. அவரை நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது, அத்தூதன் வேதவாக்கியங்களின் படியுள்ளவரா? இதோ இங்கே, தூரத்தில் பின்னால் அவர் இருக்கிறார். அங்கே ஒரு மனிதனும் அவருடைய மனைவியும் இருக்கிறார்கள். மனைவிக்கு நீரிழிவு நோய் உள்ளது. அம்மனிதனுக்கு கீல்வாத நோய் உள்ளது. ஓ, அவர்களை மாத்திரம் புரிந்துகொள்ளச் செய்ய என்னால் முடிந்தால் நல்லது, தேவனே எனக்கு உதவி செய்யும். திரு - திருமதி வில்கெர்சன் ஆகியோரே, உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். குணமடைந்து வீடு திரும்புவீராக. கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். உங்களிடம் ஜெப அட்டை உள்ளதா? உங்களிடம் இல்லையா? உங்களிடம் ஒன்று இல்லை, உங்களுக்கு ஒன்று அவசியமில்லை. நீங்கள் எழுந்து நிற்கையில், இதைக் கேளுங்கள் நண்பர்களே. உங்களை இன்னார் என்று எனக்குத் தெரியவே தெரியாது அல்லவா? நான் உங்களை அறியாதவன் என்றால், முன்னும் பின்னும் யாவரோடும் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். பாருங்கள் உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரிதானே? உங்களுக்கு ஏதோ நிகழ்ந்தது. அது சரிதானே? அது சரி. அதுதானே உங்களுடைய உபாதை? உங்களுடைய பெயர் அது தானே? அவர் சொன்னதெல்லாம் சரிதானே? அது சரியென்றால், நீங்கள் உங்கள் கரத்தை அசையுங்கள். உங்கள் கரத்தை அசையுங்கள். நல்லது வீடு திரும்புங்கள். இயேசு கிறிஸ்து உம்மை குணமாக்குகிறார். அவர்கள் எதைத் தொட்டார்கள்? முன்பு போலவே, தூதனை விசுவாசிக்கிறீர்களா, அவர் தேவனுடைய தூதன் என்று? அது நான் அல்ல. அந்த ஜனங்களை நான் அறியேன். நாங்கள் ஒருவரையொருவர் அறியோம் என்று நானும் சாட்சியிடுகிறேன். அவர்களும் சாட்சியிடுகிறார்கள். ஆகவே இதைச் செய்தது, கர்த்தருடைய தூதனானவர் தான். சோதோமைச் சுட்டெரிக்கும் முன்பாக அவர் செய்ததைப் போலவே மீண்டும் செய்வதாக இயேசு கூறியது போலவே, சரியாக வேதவாக்கியங்களின் படியான காரியங்களை அவர் கொண்டிருக்கிறார். ஆமென். 67நீங்கள் விசுவாசிப்பீர்களா என்பதை நாங்கள் காணட்டும். இங்கே, இங்கே, அது மீண்டும் சரியாக இந்த மூலையிலே இருக்கின்றது. பொறுங்கள். அந்த பெண்மணி... இல்லை. ஒரு க்ஷண நேரம்... இல்லை. அங்கே நின்று கொண்டிருக்கிற ஸ்திரீ அல்ல அது. அது அங்கே உட்கார்ந்திருக்கிற ஒரு ஸ்திரீயாகும். அது சரிதான். ஒரு சிறிய பெண்மணி இங்கே உட்கார்ந்திருக்கிறாள். ஒரு குழந்தையை நான் கண்டேன், ஆனால் கீழே உட்கார்ந்திருப்பது ஒரு பெண்மணியாகும், அவள் மூலநோயினால் உதிரம் பெருக்கெடுக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அருகில் அங்கே உட்கார்ந்திருப்பது அவளுடைய மகள். அவள் ஆஸ்துமாவினால் வருந்துகிறாள். அது “கர்த்தர் உரைக்கிறதாவது” ஆக இருக்கிறது. எழுந்து காலூன்றிநில், உன் சுகமளித்தலை ஏற்றுக்கொள். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். நீங்கள் இருவருமே எழுந்து நில்லுங்கள். நாம் ஒருவருக்கொருவர் முகமறியாத அன்னியராயிருக்கி றோமென்றால், கரங்களை உயர்த்தி, கைகளை அசையுங்கள். நல்லது அன்பானவர்களே, வீடுதிரும்புக. எல்லாம் முடிந்தது. சிறு பெண்ணே, நீ சுகமடைவாய். நீ விசுவாசிக்கிறாயா? இங்கே பாருங்கள், இங்கே பாருங்கள், இங்கே பாருங்கள், இங்கே பாருங்கள், இங்கே பாருங்கள், சகோ. ஜேக். உங்களால் அதைக் காண முடியவில்லையா? இங்கே பாருங்கள், சரியாக இங்கே தானே, இதோ அந்த மனிதனுக்கு மேலாக நின்றுகொண்டிருக்கிறதைப் பாருங்கள். அம்மனிதன் குடலிறக்க நோயினால் அவதிப்படுகிறார். அது சரிதான். அவர் இந்த நகரத்திலிருந்து உள்ளவர் அல்ல. அவர் ஆரஞ்சு என்ற நகரத்திலிருந்து உள்ளவர். சரிதான். அவருடைய பெயர். திரு. சேக். அது சரிதானே ஐயா? நான் உமக்கு அன்னியராயிருந்தால், உமது கரங்களை முன்னும் பின்னும் அசையுங்கள். ஆண்டவரே அது நானாக இருக்கட்டும்'' என்று அங்கே உட்கார்ந்து கொண்டு சொல்லிக்கொண்டிருந்தீர். அது சரிதானே. உம்முடைய கரத்தை அசையுங்கள். ஓ தேவனே, (தெளிவில்லாத வார்த்தைகள்). அதை காணத்தவற உங்களால் கூடுமோ? இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதிக்காரரும் காலூன்றி எழுந்து நின்று, தங்கள் சுகமளித்தலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பெற்றுக்கொள்ளும்படி நான் கட்டளையிடுகிறேன். ஆமென். எழுந்து நில்லுங்கள், பயப்படவேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்.